"நான்தான் 370 டிகிரில பேட்டிங் ஆட கத்துக்கொடுத்தேன்".. கலாய்த்த சஹால்.. சூரிய குமார் யாதவின் பங்கமான கமெண்ட்😂..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சூரியகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் பேசிக்கொண்ட வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிஸ்கட்டை ஆசையா வாங்கிக்கொண்ட சிறுவன்.. இறங்குற இடம் வந்ததும் நெகிழ வச்சுட்டானேப்பா.. வீடியோ..!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை ருசித்தது.
Images are subject to © copyright to their respective owners.
லக்னோவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ரன்கள் அடிக்க முடியாமல் திணறினர். 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புகளுக்கு வெறும் 99 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 19 ரன்கள் எடுத்திருந்தார். எளிய இலக்கு என்பதால் இந்திய அணி சீக்கிரம் வென்று விடும் என்றே ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிக கச்சிதமாக செயல்பட்டு, இந்திய அணி வீரர்கள் ரன் அடிக்காமல் பார்த்து கொண்டனர். விக்கெட்டுகள் செல்லாத சூழலிலும் இந்திய அணி ரன் சேர்க்க தடுமாறியது. வழக்கத்திற்கு மாறாக சூரிய குமார் யாதவ் மிகவும் நிதானத்துடன் ஆடி இந்தியாவை வெற்றியடைய செய்தார்.
Images are subject to © copyright to their respective owners.
போட்டி முடிவடைந்த பிறகு, சூரிய குமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பேசினர். அப்போது சாஹால், சூரியகுமார் யாதவின் நிதான ஆட்டத்தை பற்றி கேட்க, வாஷிங்டன் சுந்தர் அவுட்டாகி சென்ற நிலையில் இறுதிவரை நின்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டதாக சூரிய குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து சாஹல்,"நான்தான் உங்களுக்கு 370 டிகிரியில் பேட்டிங் ஆட கற்றுக்கொடுத்தேன். ஆனால், பிட்ச் வேறுவிதமாக இருந்தது. ஒருவேளை என்னுடைய ரஞ்சி டிராஃபி பேட்டிங் வீடியோவை பார்த்து கற்றுக்கொண்டீர்களா?" என பகடியாக கேட்டார். இதனை கேட்டு புன்னகைத்த சூரியகுமார்,"உண்மையில் கடந்த தொடரில் நீங்கள் கற்றுக்கொடுத்ததை என்னால் மறக்க முடியாது. பேட்டிங்கில் இன்னும் முன்னேற நீங்கள் தான் எனக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மக்களே கேளுங்கள். இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள கூடாது. இங்கே எங்களது அண்ணன் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். அவர் எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார்" என நகைச்சுவையுடன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | கையிலே ஆகாசம்.. முதல் தடவை விமானத்தில் பறந்த இளைஞரின் நெகிழ்ச்சி பதிவு.. வாழ்த்து சொன்ன நடிகை குஷ்பு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மேட்ச் ப்ரஷர் ஆகும்போது".. தோனி கொடுத்த அட்வைஸ்.. ஆப்கான் வீரர் உருக்கம்.. .. 'Captain Cool'-ன்னு சும்மாவா சொல்றாங்க..?!
- சிங்கிள் போச்சே..! மார்க்கின் ராஜதந்திரத்தை தவிடுபொடியாக்கிய வாஷிங்டன் சுந்தர்.. சும்மா பறந்து போய் பிடிச்ச கேட்ச்.. வீடியோ
- "அவரை பத்தி யாருமே பெருசா பேசலயே".. இந்திய வீரருக்காக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதங்கம்!!
- சூரிய குமார் யாதவிற்கு ICC கொடுத்த அங்கீகாரம்.. மொத்த ரெக்கார்டையும் காலி பண்ணிட்டாரு மனுஷன்...!
- "எலேய், நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு".. இளம் வீரர் அடித்த சிக்ஸ்.. ஒரு நிமிஷம் Stuck ஆகி போன ரோஹித்.. வைரலாகும் ரியாக்ஷன்!!
- "இப்படியா பண்றது?".. இஷான் கிஷன் செயலால் அப்செட் ஆன கோலி?.. மேட்ச் நடுவே பரபரப்பு சம்பவம்.. வீடியோ
- மேட்ச் நடுவே மாரடைப்பால் சரிந்த போலீஸ் அதிகாரி.. பரபரப்பான ஊழியர்கள்.. உயிரை காப்பாத்திய உதவி.. India vs New Zealand
- சதம் அடிச்சிட்டு கொண்டாடிய ரோஹித்.. சூரிய குமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. வைரலாகும் வீடியோ..!
- "நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கவலையில்ல".. தோனிக்கு வார்னிங் கொடுத்த ரவி சாஸ்திரி.. போட்டு உடைத்த முன்னாள் பயிற்சியாளர்..!
- "ரன்னு 16 இருக்கு, பாலு ஒண்ணு தானே இருக்கு".. டி 20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. பின்னி பெடல் எடுத்த ஸ்மித்!!