‘4வது இடத்துக்கு இவர்தான் சரி எனக் கூறியவர்..’ ‘நீங்க டாப் மேன்’ எனத் தற்போது ஆறுதல் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை தொடரில் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் அம்பதி ராயுடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான போட்டியில் இந்தியா சார்பாக அம்பதி ராயுடு விளையாடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் ட்விட்டரிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக தவான் வெளியேற அவருக்குப் பதிலாக அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு ரிஷப் பந்த்திற்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்தும், ஆறுதலும் கூறிவருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் அணித்தேர்வாளர்களே அவருடைய ஓய்வு முடிவுக்குக் காரணம் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி விராட் கோலி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “விஷ் யு த பெஸ்ட் ஃபார்வர்ட் அம்பதி. யு ஆர் அ டாப் மேன்” என ஆறுதலாகக் கூறியுள்ளார். முன்னதாக ஒரு பேட்டியில் “இந்திய அணியின் 4ஆம் நிலை உறுதியாகிவிட்டது. அது அம்பதி ராயுடுதான்” என விராட் கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ICCWORLDCUP2019, TEAMINDIA, VIRATKOHLI, AMBATIRAYUDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்