ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கரெக்டா கணிச்ச 'கோலி'... 'இளம்' வீரருக்கு இப்போது அடித்த 'அதிர்ஷ்டம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் அடுத்ததாக நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி, சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி 20 தொடரில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் தொடருக்காகவும் தேர்வாகியுள்ளார். அதே போல, தமிழக வீரர் நடராஜன், க்ருணால் பாண்டியா உள்ளிட்ட வீரர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, இந்த ஒரு நாள் தொடரில் ஆடுவதாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவிற்கு (Prasidh Krishna), முதல் முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வரும் பிரசித் கிருஷ்ணா, தனது பவுலிங் வேரியேஷன் மூலம் தோனி, கோலி உள்ளிட்ட பல வீரர்களை ஈர்த்துள்ளார். அது மட்டுமில்லாமல், 'லிஸ்ட் ஏ' போட்டிகளிலும் மிக முக்கியமான பந்து வீச்சாளராக உருவாகியுள்ளார். திருமணம் காரணமாக, பும்ரா விடுமுறையில் உள்ள நிலையில், பிரஷித் கிருஷ்ணாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய அணிக்காக ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது கனவு நினைவாக தருணமாக உள்ளது. எனது பங்காற்றி, அணியின் வெற்றிக்கு உதவ வேண்டி, மிகவும் ஆவலாக உள்ளேன். பிசிசிஐக்கு நன்றி' என பிரஷித் கிருஷ்ணா கூறியுள்ளார்.

 

ஆனால், பிரஷித் கிருஷ்ணா இந்திய அணிக்காக ஆட தேர்வானதை, சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னரே கணித்து கூறியுள்ளார் இந்திய கேப்டன் கோலி. கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை தொடர் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தள்ளிப் போனது.


ஆனால், அதற்கு முன்பாக, இந்த தொடர் நடைபெறும் என்ற சூழ்நிலை இருந்த போது பேசிய கோலி, 'டி 20 உலக கோப்பையில் இந்திய அணியின் 'X - Factor' ஆக பிரஷித் கிருஷ்ணா இருக்க வாய்ப்புள்ளது' என கூறியிருந்தார்.

இந்தாண்டு, டி 20 உலக கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பான தொடரில், பிரஷித் கிருஷ்ணா ஆட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்