"இவ்ளோ சின்ன வயசுலயா?".. "நெஞ்சு வலியுடன் கபடி பயிற்சி கொடுத்த 26 வயது இளைஞர்.. மாரடைப்பால் உயிரிழந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகபடி விளையாட்டுக்கு நடுவே இளைஞர் ஒருவருக்கு திடீரென நேர்ந்த சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | துருக்கி நிலநடுக்கம்: காப்பாற்றியவரை விட்டு இறங்க மறுத்த பூனை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகே அமைந்துள்ள காசக்கரன்பட்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 26). இவர் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை அடுத்த கணக்கப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் தனது ஊரில் உள்ள சிறுவர் கபடி அணியை அழைத்து கொண்டு பயிற்சியாளராக வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த போட்டிகளை காண ஏராளமான பொது மக்களும் அங்கே கூடி இருந்ததாக தெரிகிறது.
அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. முன்னதாக மாணிக்கத்திற்கு நெஞ்சு வலி இருந்த சூழலில், அதை வைத்துக் கொண்டு பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் போட்டி முடிந்த சமயத்தில், நெஞ்சு வலி அதிகரிக்கவே அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணிகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த விஷயம், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரையும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
சமீப காலமாக, மாரடைப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருவது குறித்து செய்திகள் கேள்விப்படும் சூழலில், தற்போது கபடி போட்டியில் விளையாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
மேலும் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2 லட்ச ரூபாய் நிவாரணத்தையும் அறிவித்துள்ளார்.
Also Read | தொடரின் பாதியில்.. திடீரென நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்.. பின்னணி என்ன?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிர்ச்சி! ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா MLA திடீர் மரணம்!
- மாலை மாற்றிய உடனேயே மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்.. பெரும் சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
- விறுவிறுப்பாக நடந்த கபடி போட்டி.. "பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த ஒரு கணம்.." இளம் வீரருக்கு நேர்ந்த 'துயரம்'
- 'அடுத்த மாசம் கல்யாணம்ன்னு எவ்வளவு கனவோடு இருந்தான்'... '26 வயசுல கூட இப்படி ஒரு துயரம் நடக்குமா'?... நொறுங்கி போன மொத்த குடும்பம்!
- ‘ஆட்டோ ஓட்டியபோது திடீரென வந்த நெஞ்சுவலி’... 'டிரைவருக்கு நேர்ந்த சோகம்'... ‘தாம்பரம் அருகே நடந்த பரிதாபம்'!