"வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான்.. ஆனா இன்னைக்கி 'ஐபிஎல்' நல்ல 'entry' குடுத்துருக்கு.." முதல் வாய்ப்பில் முத்திரை பதித்த 'இளம்' வீரர்.. மனதை உருக வைக்கும் 'கதை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனின் நான்காவது போட்டியில், இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் தீபக் ஹூடா, அதிரடியாக ஆடி சிக்ஸர்களை பறக்க விட்ட நிலையில், 28 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூட அதிரடியாக ஆடி, 91 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.
தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடி வரும் நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்க விக்கெட்டை ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக இன்று அறிமுகமான இளம் வீரர் சேத்தன் சக்காரியா (Chetan Sakariya) கைப்பற்றினார். ஐபிஎல் போட்டிகளில், பொதுவாக, முதல் தர மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடும் இளம் வீரர்கள், அதிகம் பேர் கண்டெடுக்கப்படுவார்கள்.
அப்படி, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்த ஏலத்தில், குஜராத்தை சேர்ந்த சேத்தன் சக்காரியா (Chetan Sakariya) என்ற 22 வயதான இளம் வீரரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. அவ்வளவு சாதாரணமாக ஒன்றும் இந்த வாய்ப்பு, சக்காரியாவுக்கு கிடைத்திடவில்லை.
சக்காரியாவின் தந்தை டெம்போ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய நிலையில், கிரிக்கெட் ஆடிக் கொண்டே, மறுபக்கம் வேலை பார்த்தும் காப்பாற்றி வந்துள்ளார் சக்காரியா.
அதே போல, அவரது வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டிவி இல்லை. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, நண்பர்கள் வீட்டில் சென்று தான் அவர் மேட்ச் பார்த்து வந்துள்ளார். மேலும், அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் போது கூட, கிழிந்த ஷூ போட்டுக் கொண்டு விளையாடியுள்ளார்.
சவுராஷ்டிரா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள சேத்தன் சக்காரியாவின் இளைய சகோதரர், ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பாக, தற்கொலை செய்து கொண்டார். இப்படி வறுமை மற்றும் பல கஷ்டங்களுக்கு மத்தியில், இன்று தனது முதல் போட்டியிலும் சக்காரியா முத்திரை பதித்துள்ளார்.
முதல் போட்டியிலேயே, சக்காரியாவை ராஜஸ்தான் அணி நம்பி களமிறக்கிய நிலையில், 4 ஓவர்கள் பந்து வீசி, 31 ரன்கள் கொடுத்து, ராகுல், மயங்க் அகர்வால் உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பால், இன்று ஐபிஎல் போட்டியிலும் களமிறங்கி சக்காரியா அசத்தியுள்ளதையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர், அவருக்கு அதிகம் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!
தொடர்புடைய செய்திகள்
- "அடுத்த 'மேட்ச்' கண்டிப்பா இவரு வேணும்".. 'இளம்' வீரருக்கு வேண்டி, 'ரசிகர்கள்' வைத்த 'கோரிக்கை'.. 'சிஎஸ்கே'வில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்'!!
- "ச்சே, என்னங்க இது?.. முதல் 'மேட்ச்'லயே இப்டி ஆயிடுச்சு??.." 'சிஎஸ்கே' ரசிகர்களை கடுப்பாக்கிய 'சம்பவம்'.. 'வைரல்' வீடியோ!!
- "இத மட்டும் என் 'மனைவி' பாக்கணும்.. கண்டிப்பா 'divorce' தான்.." ரிக்கி பாண்டிங் உடைத்த 'ரகசியம்'.. வைரலாகும் 'வீடியோ'!!
- '"சிஎஸ்கே'வ விட்டு போனதுக்கு அப்புறமும்.. 'டீம்' மேல எவ்ளோ 'அக்கறை' பாருங்க.." 'வாட்சன்' செயலால் நெகிழ்ந்த 'சென்னை' ரசிகர்கள்!.. 'வைரல்' சம்பவம்!!
- "13 வருசமா பேசிட்டே இருக்காங்க.. ஆனா, 'செயல்'ல ஒன்னும் இல்ல.." பிரபல 'ஐபிஎல்' அணியை விமர்சித்த 'கம்பீர்'.. 'பரபரப்பு' கருத்து!!
- "உங்க 'டீம்'க்கு ரொம்ப பெரிய 'நன்றி'ங்க .." 'பெங்களூர்' அணியை பங்கமாக கலாய்த்த 'பஞ்சாப்'.. பதிலுக்கு 'RCB' செய்த 'கமெண்ட்' தான் இப்போ செம 'வைரல்'!!
- அன்னைக்கி 'தோனி' சொன்ன விஷயத்த.. என் 'வாழ்நாள்' முழுக்க மறக்க மாட்டேன்.." நெகிழ்ந்த 'இளம்' வீரர்.. "பையன் வெறித்தமான 'தோனி' ஃபேன் போல!!"
- "இதுனால தான்யா 'மும்பை' எப்பவும் மாஸா இருக்காங்க!.." 'ரோஹித்' போட்ட 'மாஸ்டர்' பிளான்.. முதல் 'மேட்ச்'லயே கொடுத்த வேற லெவல் 'ட்விஸ்ட்'!!
- "இத எல்லாம் என் வாழ்க்கை'ல மறக்கவே முடியாது.. இதுக்கு எல்லாம் காரணம் அவங்க மட்டும் தான்.." நெகிழ்ந்து போன 'நடராஜன்'!.. 'வைரல்' வீடியோ!!
- 'முக்கிய' வீரர் இல்லாமல் களமிறங்கும் 'மும்பை' இந்தியன்ஸ்.. "அவருக்கு பதிலா ஆடப் போறது இவரு தான்?!".. மும்பை அணி வெளியிட்ட தகவல்!!