‘ரசிகர்கள் நெனச்சத அப்படியே சொல்லியிருக்காரு..’ வைரலாகும் ரவி சாஸ்திரியின் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்ததால் போட்டி ட்ரா ஆனது. இதன் காரணமாக சூப்பர் ஓவர் வீசப்பட அதுவும் ட்ராவில் முடிந்தது. பின்னர் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானித்தது, கடைசி ஓவரில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது என இந்தப் போட்டிக்குப் பிறகு பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தோல்வியடைந்தபோதும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கு சிறந்த ஆட்டத்திற்காகவும், தோல்வியைக் கையாண்ட விதத்திற்காகவும் கூல் கேப்டன் எனப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேன் வில்லியம்ஸனைப் பாராட்டிப் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

ரவி சாஸ்திரி ட்விட்டரில், நடந்து முடிந்த இந்தப் போட்டியில் கேன் வில்லியம்ஸனின் பொறுமை மற்றும் உயர்ந்த தன்மை பாராட்டப்பட வேண்டியது. உலகக் கோப்பை முடிந்த (நியூசிலாந்து தோல்வியுற்றது) பிறகான, இந்த 2 நாட்களில் வில்லியம்ஸனின் கண்ணியமான நடத்தை மற்றும் அமைதி குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “எங்களுக்குத் தெரியும் அந்த உலகக் கோப்பை உங்களுக்கும் சேர்ந்ததே. நீங்கள் Kane மட்டும் இல்லை. நீங்கள் Kane (Can என்கிற அர்த்தத்தில்) மற்றும் Able” என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

 

 

 

ICCWORLDCUP2019, NZVSENG, KANEWILLIAMSON, RAVISHASTRI, VIRALTWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்