அந்த ‘12 மணிநேரம்’ இனி ரொம்ப வேதனையா இருக்கும்.. வெற்றிக்கு பின் தோனி சொன்ன ‘ஒரு’ வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய தோனி, இனி விளையாட உள்ள 3 போட்டிகள் வலி மிகுந்ததாக இருக்கும் என கூறினார்.

ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களை எடுத்தார்.

இதனை அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தநிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ‘இந்த போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தது. பவுலிங் சிறப்பாக இருந்ததால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. இந்த தொடரில் நாங்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ருதுராஜ் நன்றாக விளையாடினார். அவருக்கு எப்போது ஷாட்ஸ் அடிக்க வேண்டும் என தெளிவாக தெரிந்திருக்கிறது. அதன்படி அவர் ரன்களை சேர்த்தார். ஒரு மோசமான போட்டி உங்களை மிகவும் சோர்வுக்கு உள்ளாக்கும், உணர்ச்சிவசப்பட வைக்கும். அதனால் ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்’ என தோனி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தோனி, ‘ப்ளே-ஆஃப் செல்ல உண்மையில் வாய்ப்பு இல்லை. கணக்கு போட்டு பார்ப்பதை விட்டு விடுங்கள். இனி விளையாட உள்ள 3 போட்டிகளின் 12 மணிநேரம் வேதனையானதாக இருக்கும். கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒவ்வொரு போட்டியின் முடிவும் உங்களை காயப்படுத்தும். இந்த போட்டியில் இளம்வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது’ என அவர் பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்