'இந்திய அணிய வச்சு செய்யணும்!.. அதுல வர சுகம் இருக்கே... அடடடா'!.. 'வில்லன்' மோடில் மாறிய வில்லியம்சன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இந்தியா நியூசிலாந்து இடையேயான இந்த இறுதி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளையும், கணிப்புகளையும், இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல் இறுதி போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள இரு அணி வீரர்களும் தங்களது எதிர்பார்ப்பை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியுடனான இந்த போட்டி குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இறுதி போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், "இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவது சவாலான காரியம். அதனால் தான் சொல்கிறேன் இந்தியாவுடன் விளையாடுவது உற்சாகமானது என்று. அதுவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என்றால் சொல்ல வேண்டாம். அந்த உற்சாகத்திற்கு எல்லையே கிடையாது. அதோடு அதில் கிடைக்கும் வெற்றி ஆகச்சிறந்த ஒன்று" என வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்