'நம்ம பவுலிங் அட்டாக் 'இப்படி' இருந்தா தான்... நியூசிலாந்தை சுருட்ட முடியும்'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நெஹ்ரா போட்ட ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த இறுதி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும், இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல் இறுதி போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள இரு அணி வீரர்களும் தங்களது எதிர்பார்ப்பை ஓப்பனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நியூசிலாந்து அணியுடனான இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இறுதி போட்டிக்கான இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் யார் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆஷிஷ் நெஹ்ரா பேசுகையில், "இங்கிலாந்து மைதானங்கள் நிச்சயம் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். பந்துவீச்சில் இரு அணிகளுமே அதிக பலம் பெற்றுள்ளன. இந்திய அணியை போலவே நியூசிலாந்து அணியிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணியின் கையே சற்று ஓங்கியிருக்கும். முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் பும்ராஹ் ஆகியோர் குறையே சொல்ல முடியாத அளவிற்கு விளையாடி வருகின்றனர்.

என்னை பொறுத்தவரையில் இறுதி போட்டிக்கான இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என திட்டமிட்டால், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் களமிறங்க வேண்டும்.

அதே வேளையில், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டால் உமேஷ் யாதவிற்கு பதிலாக முகமது சிராஜிக்கு கை கொடுக்க வேண்டும். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்குமே அணியில் இடம் கொடுத்தால் அது இந்திய அணிக்கு அனைத்து வகையிலும் பயனுள்ளதாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்