பிசிசிஐ போட்ட கடுமையான ரூல்ஸ்!.. பொறுப்பாக நடந்துகொண்ட கோலி, ரோகித்!.. எஸ்கேப் ஆன இந்திய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி வீரர்கள் பிசிசிஐ-ன் கடுமையான குவாரண்டைனுக்குள் முழுமையாக வந்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதன் பின்னர், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரில் நடந்த கொரோனா பிரச்சினை, இங்கிலாந்து சுற்றுபயணத்திலும் நடந்துவிடக்கூடாது என பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு தனி விமானம் மூலம் புறப்படுகின்றனர்.

அதற்கு முன்னதாக 14 நாட்கள் அவர்கள் குவாரண்டைனில் இருப்பதற்காக மும்பையில் பிசிசிஐ பயோ பபுள் ஏற்படுத்தியிருந்தது. இதற்காக கடந்த 19ம் தேதி இந்திய வீரர்கள் பபுளில் இணைந்தனர். ஆனால், கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே மும்பையில் உள்ளதால் அவர்கள் ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இன்று பிசிசிஐ-ன் பபுளில் இணைந்தனர். இந்த பபுள் ஆனது மும்பை விமான நிலையம் அருகில் உள்ள ஹயாத் ஹோட்டலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள விருதிமான் சாஹா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தான் பபுளில் இணைந்தனர் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்கள் அணியைப் போல இந்திய மகளிர் அணியும் இன்று பிசிசிஐ-ன் பபுளில் இணைந்துள்ளது. இந்திய மகளிர் அணியானது வரும் ஜூலை 16ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி, மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக அவர்கள் மும்பையில் 8 நாட்கள் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். இரு அணிகளும் சேர்ந்துதான் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து பயணிக்கவுள்ளது. 

இந்திய ஆண்கள் அணிக்கான தொடர் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 3 மாத நீண்ட சுற்றுப்பயணம் என்பதால் வீரர்களின் குடும்பத்தினரையும் இங்கிலாந்து அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்காக அவர்கள் விரைவில் வரவழைக்கப்பட்டு பபுளுக்குள் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்