இங்கிலாந்து டூர்... மும்பையில் தங்கியிருந்த இளம் வீரரை கழற்றிவிட்ட இந்திய அணி!.. ஆசை காட்டி மோசம் செய்ததா பிசிசிஐ?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து தொடருக்காக பிசிசிஐ-யின் மும்பை குவாரண்டைனில் இருந்த இளம் வீரர் கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவும் ஜூன் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டது.
மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடைபெறும் மிகப்பெரிய தொடராக இருப்பதால் 25 பேர் கொண்ட இந்திய அணி தயார் செய்யப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஆனால் ஐ.பி.எல் தொடரின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சஹா மூன்று மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான போட்டிகளில் எவ்வளவு ஃபிட்டாக இருப்பார் என்று கூற முடியாது என்கிற அடிப்படையில் மூன்றாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ் பரத்தை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக பிசிசிஐ இணைத்தது.
இதன் காரணமாக ஜூன் 19ஆம் தேதி முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணியுடன் கே.எஸ் பரத்தும் மும்பையில் உள்ள ஹோட்டலில் குவாரண்டைன் இருந்தார். அதனால் நிச்சயம் ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்லும் அணியுடன் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி அவரை நிராகரித்துவிட்டு இங்கிலாந்து பயணித்தது.
இது குறித்து வெளியான செய்தியில் சஹா தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதால் அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக கூறிவிட்டதால் பரத் அணியில் இணைக்கப்படவில்லை என்றும், அதனால் அவர் இங்கிலாந்து பயணிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மும்பை வரை வந்து, குவாரண்டைனில் இருந்த பின்னர், திரும்பவும் இவரை வீட்டுக்கு அனுப்பியது மிகவும் பரிதாபதுக்குரிய நிலை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '125 ஆண்டு வரலாற்றை.. ஒரே நாளில் சுக்கு நூறாக நொறுக்கிய கான்வே'!.. உலக சாதனை!.. கொண்டாடும் நியூசிலாந்து!.. அலர்ட்டான இந்திய அணி!
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'யார் ஜெயிச்சாலும்... தொடர் நாயகன் விருது இவருக்கு தான் கொடுக்கணும்'!.. விடாப்பிடியாக இருக்கும் ஹர்பஜன்!
- 'பிரபல பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்கா'?.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விக்கு... கொந்தளித்த ரவி சாஸ்திரி!
- "அப்படி பேசாதீங்க"... "ஆனா அந்த மாதிரி யாராவது சொல்லும்போது"... கோலி பற்றிய ரகசியம்!.. போட்டு உடைத்த பாபர் அசாம்!
- ‘என் அப்பா இறந்தபோது ரவி சார் ஒரு அட்வைஸ் சொன்னாரு’!.. இந்திய அணியின் இளம் நம்பிக்கை முகமது சிராஜ் உருக்கம்..!
- 'இந்திய அணியில் விஜய் சங்கர் ஓரங்கட்டப்பட்டது ஏன்'?.. கலங்கவைக்கும் பின்னணி!.. உண்மைகளை உடைத்த அஸ்வின்!
- 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... 3 இறுதிப்போட்டிகளா'?.. கடைசி நேரத்தில் குண்டை தூக்கி போட்ட ரவி சாஸ்திரி!.. அதிர்ந்து போன இந்திய வீரர்கள்!
- முதல் மேட்ச்சிலேயே... தெறித்த ஸ்டெம்ப்புகள்!.. இந்தியாவுக்கு மறைமுக சிக்னல்!.. யார் இந்த இங்கிலாந்து புயல்?
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் final!.. நியூசிலாந்துக்கு சாதகமா?... இந்திய அணியின் நிலை என்ன?..உண்மையை உடைத்த கோலி!
- ‘அந்த பவுலர்தான் நமக்கு சவாலா இருக்க போறார்’!.. ‘இதை மட்டும் சரியா பண்ணிட்டா நாம ஜெயிச்சிறலாம்’.. அஸ்வின் கணிப்பு..!