உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'யார் ஜெயிச்சாலும்... தொடர் நாயகன் விருது இவருக்கு தான் கொடுக்கணும்'!.. விடாப்பிடியாக இருக்கும் ஹர்பஜன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தொடர் நாயகன் விருதைப் பெற இவர் ஒருவருக்குத் தான் தகுதி உள்ளது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை உலக அளவில் பிரபலமாக்கத் திட்டம் தீட்டிய ஐசிசி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் செய்தது. 2019ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இப்போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும், வீரர்களின் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இறுதிப் போட்டி குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங், தொடர் நாயகன் விருதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ரிஷப் பண்ட் அணிக்குத் தேவையான ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி, சில முக்கிய போட்டிகளில் மேட்ச் வின்னராகவும் இருந்தார். விக்கெட் கீப்பங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டார். இதனால், தொடர் நாயகன் விருதை இவருக்கு வழங்குவதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இதுவரை 17 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரிஷப் பண்ட் 41 சராசரியுடன் 662 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு அரை சதமும், ஒரு சதமும் அடங்கும். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகக் கடைசி டெஸ்ட் போட்டியில் 97* ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவரின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்