ஒருவேளை மேட்ச் டை அல்லது டிரா ஆனால் யார் வின்னர்..? டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் பற்றி ‘ஐசிசி’ அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா அல்லது டை ஆனால் யாருக்கு டிராபி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 9 அணிகள் விளையாடின. மொத்தமாக 25 தொடரில் மோதியதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதனிடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் எதாவது காரணங்களால் நடத்த முடியாமல் போனாலோ அல்லது போட்டி டை அல்லது டிராவில் முடிந்தாலோ எந்த அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்படும்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த ஐசிசி, ‘போட்டி நடத்த முடியாமல் போனால் டை பிரேக்கர் ஏதும் கிடையாது. அதேபோல் நடைபெறும் போட்டி டிராவிலோ அல்லது டை ஆனாலோ இரு அணிகளுக்கும் சாம்பயன் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும். இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் சாம்பியன் என்று அறிவிக்கப்படும்’ என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்