'நியூசிலாந்த வெறுப்பேத்துங்க'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற... இந்திய அணிக்கு 'எமோஷனல் அட்வைஸ்' கொடுத்த முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணிக்கு 3 முக்கிய கருத்துகளை முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளதால் பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் முடிவு வரை 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது. நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவிருந்த சூழலில் தொடந்து பெய்த மழையினால் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
ஏற்கனவே 2 நாள் ஆட்டம் மழையினால் பாதிக்கபட்டதால் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் கொடுக்கப்படவுள்ளது. ஆனால், நியூசிலாந்து அணி 101 ரன்களை அடித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி 5ம் நாள் ஆட்டத்தில் வெகு சீக்கிரமாக விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனால் இன்றைய தினம் பந்துவீச்சாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் வீரர் லக்ஷ்மன் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 5ம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் 3 விஷயங்களை செய்ய வேண்டும். முதலாவதாக பவுலர்களின் லெந்தில் மாற்றம் வேண்டும். தற்போது வரை இந்திய வீரர்கள் குட் லெந்த் பகுதியில் அதிகமாக வீசி வருகின்றனர். ஆனால், அவர்கள் இனி ஃபுல் லெந்தில் வீச வேண்டும். அப்போது தான் விக்கெட் எடுக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். 2வது விஷயமாக இந்திய வீரர்கள் நிதானத்தை கடைபிடித்து ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ரன்களை அதிகளவில் கொடுத்துவிட்டால், இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமாகி விடும்.
எனவே, முடிந்தவரை நியூசிலாந்து அணியின் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். 3வது விஷயமாக நியூசிலாந்து வீரர்களை ஆக்ரோஷப்பட வைக்க வேண்டும். அந்த அணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிகளவில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச வேண்டும். அப்போது அவர்கள் அடித்து ஆட நினைத்து அவுட்டாவார்கள். குறிப்பாக ராஸ் டெய்லர், கிராண்ட் ஹோம் ஆகியோருக்கு வீசலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WTC final: ‘மழையால் அடுத்தடுத்து கைவிடப்படும் போட்டி’.. ரசிகர்களுக்கு ‘சிறப்பு’ சலுகை.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!
- ஒருவேளை மேட்ச் டிரா ஆனா யார் ‘வின்னர்’-னு எப்படி முடிவு பண்றது..? ஐசிசிக்கு கவாஸ்கர் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு..? கேள்விக்கு ‘நச்’ என்று அஸ்வின் சொன்ன பதில்..!
- வாக்கி டாக்கியில சிராஜ் அப்படி என்ன பேசியிருப்பாரு..? சிக்கிய ஒரே ஒரு போட்டோ.. வகை வகையாக ‘மீம்ஸ்’ போட்ட நெட்டிசன்கள்..!
- VIDEO: அடக்கடவுளே..! நாம அடிச்ச ‘சிக்சர்’ இப்படி நமக்கே ஆப்பு வச்சிருச்சே.. தலையில் கை வைத்து உட்கார்ந்த பேட்ஸ்மேன்.. விழுந்து விழுந்து சிரித்த வீரர்கள்..!
- ‘அவர் இந்திய அணிக்கு கிடச்ச வரம்’!.. கொஞ்சம் அவரோட ‘ரெக்கார்ட்’-ஐ எடுத்துப் பாருங்க.. தமிழக வீரரை தாறுமாறாக புகழ்ந்த பும்ரா..!
- 'இத' சொல்றதுக்கு எனக்கு 'கஷ்டமா' தான் இருக்கு...! ஆனா 'நிலைமை' சரி இல்லையே...! கண்டிப்பா 'அத' பண்ணியாகணும்...! - பீட்டர்சன் கருத்து...!
- 'இந்திய அணியில் ஒரு இங்கிலாந்து தாதா'!.. அசுரத்தனமான பவுலிங்... புது வரலாறு படைத்த இஷாந்த் சர்மா!
- VIDEO: ‘அவருக்கு அடிக்கவே தெரியல’!.. நியூஸிலாந்து பேட்ஸ்மேனை ‘கிண்டல்’ செய்த கோலி.. காட்டிக்கொடுத்த ஸ்டம்ப் மைக்..!
- ‘இது ஒன்னும் இந்தியா கிடையாது பேட்டை தாறுமாறாக சுத்த’!.. ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் சொன்ன காட்டமான அட்வைஸ்..!