WTC Final-ல் நியூஸிலாந்துக்கு ‘செம’ டஃப் காத்திருக்கு.. இந்திய வீரர்களின் ‘வெறித்தனமான’ ப்ராக்டீஸ் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்திய அணியினர் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி சவுதாம்டனில் நடைபெறவுள்ளது. இதற்காக 24 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த ஜூன் 3-ம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றது. முன்னதாக மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து இங்கிலாந்திலும் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இது மிக முக்கியமான போட்டி என்பதால் 3 நாட்கள் கடுமையான தனிமைப்படுத்தலில் இந்திய வீரர்கள் இருந்தனர். அந்த மூன்று நாளும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, புஜாரா, ரிஷப் பந்த், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

தற்போது நியூஸிலாந்து அணி இங்கிலாந்து எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதனால் இங்கிலாந்து மைதானம் நியூஸிலாந்து வீரர்களுக்கு பழக்கமாகியுள்ளது. ஆனால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி மட்டுமே உள்ளது. அதனால் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்