'டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... இந்தியாவின் பவுலிங் சூப்பர்ஸ்டார் 'இவர்' தான்!.. கண்டிப்பா டீம்ல எடுக்கணும்'!.. முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுகமது சிராஜ், இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துவிட்டார் என்று இந்திய முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்கவிருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் பேட்ஸ்மேன்களை விட, ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கும் விஷயம் என்னவெனில், அணியில் இடம் பிடிக்கப் போகும் ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என்பதே.
பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ், சிராஜ் ஆகிய ஐந்து ஃபாஸ்ட் பவுலர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதில், சிராஜ் தவிர மற்ற அனைவருக்கும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு என்று சிலர் கருதலாம். ஏனெனில், இவர்கள் நால்வருமே அணியின் சீனியர் பவுலர்ஸ். எனினும், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், லீடிங் விக்கெட் டேக்கராக இருந்தவர் சிராஜ் தான். விக்கெட்டுகள் மட்டுமல்ல, அவர் பந்துவீசிய விதம், வெளிப்படுத்திய ஆக்ரோஷம் அனைத்தும் ரசிகர்களை மட்டுமல்லாது தேர்வுக்குழுவினரையும் ஈர்த்தது.
இந்த நிலையில், இந்திய முன்னாள் வீரர்கள் ரீதிண்டர் சோதி மற்றும் சபா கரீம் ஆகியோர், முகமது சிராஜ் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்கின்றனர். இதுகுறித்து அவர்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எனும் மிக முக்கிய கிரிக்கெட் போட்டியில், முகமது சிராஜ் விளையாடுவது தவிர்க்க முடியாதது. அந்த போட்டி அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மாறப்போகிறது. என்றனர்.
மேலும், சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னமும் குழந்தையாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர் விளையாடிய விதம், அவர் காட்டிய போராட்ட குணம், அவர் வீசிய பந்துகள் போன்றவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு அவர் ஏன் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் பவுலர்கள் லிஸ்டில், இஷாந்த் ஷர்மாவின் பெயருக்கு முன்னர் சிராஜ் பெயர் இருந்தால், அது மிகப்பெரிய விஷயமாக அமையும்.
இப்போது நியூசிலாந்தில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள், டாம் லாதம், டெவோன் கான்வே, ஹென்றி நிகோலஸ், மிட்சல் சான்ட்னர் ஆகிய நான்கு வீரர்கள் உள்ளனர். இந்திய அணியின் பவுலர்களில், இந்த நான்கு இடது பேட்ஸ்மேன்களுக்கும் சிராஜ் சிறப்பாக பந்து வீச முடியும். அதனால், தான் விராட் மற்றும் ரவி சாஸ்திரியின் தேர்வாக சிராஜ் இருக்க வாய்ப்பிருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மத்த 'சீனியர்' பிளேயர்ஸ விடுங்க.. ஆனா, இந்த 'பையன்' கண்டிப்பா ஆடியே ஆகணும்.. அவரு இந்தியன் 'டீம்'க்கு ரொம்ப 'முக்கியம்'.. கோரிக்கை வைக்கும் 'முன்னாள்' வீரர்கள்!!
- 'இந்த சின்ன விஷயத்துக்கு கூட அனுமதி இல்லை'!.. கடுமையான குவாரண்டைன்!.. இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து கெடுபிடி!
- 'அசாத்திய பவுலிங் திறமை இருந்தும்... அடுத்த போட்டிக்கு வாய்ப்பு இல்லை'!?.. கெஞ்சும் இளம் வீரர்!.. கொந்தளிப்பில் இங்கிலாந்து கிரிக்கெட்!
- 'நான் இல்லாம டெஸ்ட் சாம்பியன்ஷிப்பா'!?.. 'Never!'.. வேற லெவல் சம்பவத்துக்கு தயாராகும் தினேஷ் கார்த்திக்!.. ஏன் இந்த திடீர் முடிவு?
- இங்கிலாந்து டூர்... மும்பையில் தங்கியிருந்த இளம் வீரரை கழற்றிவிட்ட இந்திய அணி!.. ஆசை காட்டி மோசம் செய்ததா பிசிசிஐ?
- '125 ஆண்டு வரலாற்றை.. ஒரே நாளில் சுக்கு நூறாக நொறுக்கிய கான்வே'!.. உலக சாதனை!.. கொண்டாடும் நியூசிலாந்து!.. அலர்ட்டான இந்திய அணி!
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'யார் ஜெயிச்சாலும்... தொடர் நாயகன் விருது இவருக்கு தான் கொடுக்கணும்'!.. விடாப்பிடியாக இருக்கும் ஹர்பஜன்!
- 'பிரபல பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்கா'?.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விக்கு... கொந்தளித்த ரவி சாஸ்திரி!
- "அப்படி பேசாதீங்க"... "ஆனா அந்த மாதிரி யாராவது சொல்லும்போது"... கோலி பற்றிய ரகசியம்!.. போட்டு உடைத்த பாபர் அசாம்!
- ‘என் அப்பா இறந்தபோது ரவி சார் ஒரு அட்வைஸ் சொன்னாரு’!.. இந்திய அணியின் இளம் நம்பிக்கை முகமது சிராஜ் உருக்கம்..!