'ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல... 5 பேரு இருக்கோம்!.. முடிஞ்சா தொட்டு பாருங்க'!.. நியூசிலாந்துக்கு சொடக்கு போட்டு சவால் விட்ட ஷமி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய வேகப்பந்து வீச்சு, அதற்கேற்ற ஸ்பின் கலவை இவற்றால் எதிரணியினருக்கு எந்த மாதிரியான பிட்சை அளிப்பது என்பதில் பெரும் குழப்பம் இருக்கும் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி தெரிவித்துள்ளார்.

ஜூன் 18ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி தொடங்குகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் அயல்நாட்டு ஆட்டங்கள் மிகச் சிறப்பாக அமையக் காரணம், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், இப்போது சிராஜ் உள்ளிட்டோரின் பங்களிப்பு என்றால் மிகையாகாது. 4-5 வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்குகின்றனர் என்பதோடு பாரத் அருண் பயிற்சியின் கீழ் அபாரமான லைன் மற்றும் லெந்தை இழக்காமல் மணிக்கு 145 கிமீ வேகமும் வீசி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா நியூஸுக்கு மொகமட் ஷமி கூறியதாவது, "நம் பவுலிங் யூனிட்டின் பெரிய சாதக அம்சம் என்னவெனில் 4-5 பேர் இருப்பதோடு மட்டுமல்ல, அனைவருமே மணிக்கு 145 கிமீ வேகம் வீசக்கூடியவர்கள் என்பதே ஆகும். ஒன்று, அல்லது இருவர் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், 4-5 பேர் 145 கிமீ வேகம் வீச முடியும் என்பது இந்தக் காலக்கட்டத்தில் அதிசயம் தான். இதனால் எதிரணியினர் அயல்நாடுகளில் என்ன மாதிரியான பிட்சை அமைப்பது என்பது பற்றி குழம்பி விடுகின்றனர்.

இதற்கு முன்னால் ஒருவர் அல்லது இருவர் இந்த வேகத்தில் வீசக்கூடியவர்கள் இருந்தனர். ஆனால் 4-5 பேர் இருந்ததில்லை. முன்பு எல்லாம் நமக்கு எதிராக எதிரணியினர் சுலபமாக திட்டமிட்டு விடுவார்கள், ஆனால் இப்போது முடியாது.

மூத்த வீரர்களாக இளையோரிடம் சந்தேகங்களை தயக்கமில்லாமல் கேளுங்கள் என்கிறோம். அணியில் மூத்த வீரர்களுக்கும் இளைய வீரர்களுக்குமான சகோதரத்துவம் அபாரமானது.

ஒருநாள் நாம் ஆட்டத்தை விட்டுப் போகப்போகிறோம், ஆனால், எதை விட்டுச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் நாடு நம் கேப்டன், வாரியம் ஆகியவற்றுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்