இந்திய அணியின் தூண்கள் காலி!.. டெஸ்ட் பந்தில் மாயஜாலம் செய்யும் ஜேமிசன்!.. போட்ட ப்ளானை அப்படியே செய்து அசத்தியது எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி டாப் ஆர்டரை காலி செய்த கெயில் ஜேமிசனின் வியூகம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 6வது நாளான இன்று 32 ரன்கள் முன்னிலையுடன் 64/2 என்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. விராட் கோலி மிட் விக்கெட்டில் ஒரு பிளிக், 3 ரன்களையும், பிறகு பாயிண்டில் அடித்து ஒரு 3 ரன்களையும் எடுத்து 13 ரன்கள் எடுத்து ஆடிவந்தார்.

ஆனால், இந்த இரண்டு 3 ரன்களுக்குப் பிறகு ஜேமிசன் வீசிய 12வது ஓவரில் கோலி மிகவும் மெதுவாக ஆடினார். ஒரு பந்து சற்றே நின்று ஸ்விங் ஆக, அதைத் தடுக்க முயற்சித்து தோல்வி அடைந்தார். அடுத்த பந்தும் அதே மாதிரி இருந்ததால், காலை நகர்த்தாமல் மீண்டும் பந்தை கோட்டைவிட்டார்.

அதன் பிறகு, 13வது ஓவரை வீச கெயில் ஜேமிசன் வந்தார். முதல் பந்திலேயே இன்ஸ்விங்கரை வலது காலில் வாங்கினார் கோலி. அப்போது கேட்கப்பட்ட எல்.பி. அப்பீலை நடுவர் மறுத்தார்.

இதே ஓவரின் கடைசி பந்தை சற்றே அடித்து வீசினார் ஜேமிசன். பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் எழும்பியது, கோலியும் எழும்பி அதைத் தடுக்க முயற்சித்து, எட்ஜ் ஆகி வாட்லிங்கிடம் கேட்ச் ஆனது. இந்த டெஸ்ட் போட்டியில் இருமுறை கோலி ஜேமிசனிடம் அவுட் ஆகியுள்ளார். ஜேமிசனின் ஆர்சிபி காண்ட்ராக்ட் அவ்வளவுதானா என்கின்றனர் நெட்டிசன்கள். முதல் இன்னிங்ஸில் ஜேமிசன் கோலியை எல்.பி.டபுள்யூ மூலம் அவுட் ஆக்கினார். இப்போது கேட்ச் அவட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, புஜாரா ஓவர் பிட்ச் பந்தையெல்லாம் கைக்கு நேராக அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், ஜேமிசனின் அபாரமான மூன்றாவது ஸ்டம்ப் லைனில் வீச, புஜாரா ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும், ஆனால் அவர் பேட்டை பந்தின் மீது மெதுவாக ஆட முயற்சி செய்து, எட்ஜ் ஆகி டெய்லரிடம் கேட்ச் அவுட்டானார்.

கெயில் ஜேமிசனின் ஸ்விங் பந்துகளை கையாள முடியாமல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறியது, நியூசிலாந்துக்கு மிகப்பெரும் பலமாக மாறி உள்ளது. குறிப்பாக, கோலி மற்றும் புஜாரா ஆகியோர் நிலைத்து நின்று ஆடவிடாமல் தடுத்தது, கெயில் ஜேமிசனின் வியூகம் வெற்றிபெற்றதையே உணர்த்துகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்