உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் final!.. நியூசிலாந்துக்கு சாதகமா?... இந்திய அணியின் நிலை என்ன?..உண்மையை உடைத்த கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை எதிர்கொள்வது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்படவுள்ள நிலையில், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிக மதிப்பு கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். இது நம் அனைவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி போன்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த போட்டிக்காக எந்த பிரஷரும் எனக்கு இல்லை. நான் இந்திய அணியை முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும் அதுதான் மனதில் உள்ளது. இதற்கு முன்னர் எந்த பிரஷரும் இல்லாத போது, தற்போது மட்டும் எப்படி வரும். நமக்கு முன்னதாக நியூசிலாந்து அணி அங்கு சென்றுவிட்டது பெரிய விஷயம் அல்ல. நியூசிலாந்து அணி ஏற்கனவே அங்கு சென்று பயிற்சி மேற்கொள்வது குறித்து பேசிய கோலி, நாங்கள் ஒன்னும் முதல்முறையாக இங்கிலாந்து செல்லவில்லை. அந்த களம் குறித்து எல்லாம் நினைவு இருக்கிறது. எனவே, 4 பயிற்சி ஆட்டங்கள் மட்டும் இருப்பது எங்களுக்கு பெரிய பிரச்சினை கிடையாது.
இந்த இறுதிப் போட்டியோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். அந்த இடத்திற்கு செல்ல நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இது கால்பந்து போன்றது, நீங்கள் ஒரு சாம்பியன்ஸ் லீக்கை வென்றால், அத்தோடு நிறுத்த மாட்டீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற விரும்புவீர்கள் எனக்கூறினார்.
தொடர்ந்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவது இதுவே முதன் முறை. இது மிகப்பெரிய போட்டியாக அமையப் போகிறது. ஏன் இது உங்களை சோதிக்கும் ஒரு வடிவமாகவும் இருக்கும். உலக அணிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று மோதியுள்ளன. இறுதிப்போட்டியில் இந்த 2 அணிகளும் தகுதிப்பெற்றுள்ளன எனக்கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்’!.. வெளிநாட்டு வீரர்களுக்கு ‘செக்’ வைத்த பிசிசிஐ.. அதிரடி முடிவு..!
- இந்திய அணி மீது இப்படி ஒரு பகையா?.. "வாஷ் அவுட் செய்யணும்!".. வெறியோடு இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!
- 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'!.. இந்திய அணியை கெத்தாக மாற்றிய 'அந்த' ஒரு போட்டித் தொடர்!.. ஐசிசி கொடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு!
- டி20 உலகக் கோப்பை கதி என்ன?.. ஐசிசி சரமாரி கேள்வி!.. வாய்தா வாங்கிய பிசிசிஐ!.. அடுத்தடுத்து எழும் சிக்கல்கள்!
- 'சின்ன விஷயம் தான்... 'இது' மட்டும் நடந்தா போதும்... ரோகித் இரட்டை சதம் confirm'!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... சாதிக்குமா இந்தியா?
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 'பல திட்டங்களோடு... ஆசை ஆசையாய் காத்திட்டு இருந்தோம்'!.. பிசிசிஐ கனவுக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து!
- செம்ம ஃபார்ம்ல இருக்குற ப்ளேயருக்கு... வேணும்னே 'Family Leave' கொடுத்த நியூசிலாந்து அணி!.. இந்திய அணிக்கு எதிராக மெகா ஸ்கெட்ச்!
- 'நீங்க உங்க இஷ்டத்துக்கு ஐபிஎல் நடத்துவீங்க... நாங்க எங்க ப்ளேயர்ஸ் அனுப்பனுமா'?.. பிசிசிஐ-யிடம் கராராக சொன்ன கிரிக்கெட் வாரியம்!
- 'ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல... 5 பேரு இருக்கோம்!.. முடிஞ்சா தொட்டு பாருங்க'!.. நியூசிலாந்துக்கு சொடக்கு போட்டு சவால் விட்ட ஷமி!
- 'கூரைய பிச்சுட்டு கொட்ட வேண்டிய துட்டு!.. அநியாயமா கைநழுவி போகுதே'!.. ஐபிஎல்-ஐ தொடர்ந்து அடுத்த ஆப்பு!.. கைவிரித்த பிசிசிஐ!