89 வருசத்துக்கு பிறகு ‘முதல்முறையா’ இந்தியா இப்படியொரு போட்டியில் விளையாட போகுது.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடக்கவுள்ள சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதவுள்ளன. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தற்போது மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே எந்த அணிகளாக இருந்தாலும், இரு நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில்தான் போட்டிகள் நடைபெறும். ஆனால் இப்போது முதல் முறையாக நடுநிலை மைதானமான இங்கிலாந்தில் வைத்து நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு அச்சம் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அந்நாட்டுக்கு எதிராக விளையாடும் மற்ற அணிகள் ஐக்கிர அமீரக அரபு போன்ற நடுநிலையான மைதானங்களில்தான் விளையாடி வருகின்றன. இதில் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் காரணத்தால் இந்தியா இதுவரை நடுநிலை மைதானத்தில் விளையாடவில்லை.

இந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால், 89 ஆண்டுகளுக்கு பிறகு நடுநிலை மைதானத்தில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்