'இந்திய அணிக்கு டைம் நல்லா இருக்கு!.. அதனால தான் தப்பிச்சுட்டாங்க'!.. WTC Final தொடர்பாக... வாயைக் கொடுத்து வாங்கி கட்டிய மைக்கேல் வாகன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகின்ற சவுத்தாம்ப்டனில் மழை வந்த கடுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களை மைக்கேல் வாகன் மேலும் கடுப்பாக்கியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக போட்டி இன்னும் தொடங்காமல் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல், போட்டி நடைபெறவுள்ள சவுத்தாம்ப்டன் நகரில், தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் 3.30 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய இந்தியா - நியூசிலாந்து போட்டி உணவு இடைவெளி வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மழை குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ள கருத்து இந்திய ரசிகர்களை சூடாக்கியுள்ளது. சவுத்தாம்ப்டன் மழை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாகன், "மழை குறுக்கீடு செய்ததால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து இந்தியா தப்பித்துள்ளது என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர் என அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்று அசுரபலத்தில் இந்தியா உள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக வாகன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து பேசியிருந்த வாகன், "நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. அந்த டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி தற்போது ஹை கிளாஸ் அணியாக வலம் வருகிறது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் நியூசிலாந்து வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இங்கிலாந்து மைதானங்களில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். அதையே நாம் இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பார்த்தோம். எனவே, இந்திய அணியை, நியூசிலாந்து சுலபமாக வென்றுவிடும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே இந்தியா குறித்து வாகன் கிண்டல் அடித்து பேசுவது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சோதனை.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு..!
- 'அடுத்த தோனியா?.. அடுத்த கில்கிறிஸ்டா'?.. சச்சின் பார்வையில்... ரிஷப் பண்ட் யாரை பிரதிபலிக்கிறார்?
- பவுலிங் படையில் ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்திய அணியின் ப்ளேயிங் 11 அறிவிப்பு!
- VIDEO: 'கணவரை நேர்காணல் செய்த மனைவி'!.. மாறி மாறி வெட்கப்பட்ட காதல் ஜோடி!.. பும்ராவுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சனா!
- ‘ரூல்ஸை மீறிட்டாங்க’!.. நியூஸிலாந்து வீரர்கள் மீது பிசிசிஐ புகார்.. சிம்பிளாக ஐசிசி சொன்ன பதில்..!
- 'இதுக்கு மேல தாங்க முடியாது'!.. 'தேறாத உடல் நிலை!.. இழந்த நினைவுகள் மீண்டும் வருமா'?.. சொந்த ஊருக்கு திரும்பும் டூ ப்ளசிஸ்!
- 'ஏங்க... இப்படி பண்றீங்க?.. இது ரொம்ப கொடுமை'!.. இங்கிலாந்து வீரர் ஓலே ராபின்சன் பாலியல் சர்ச்சை!.. உணர்ச்சி வசப்பட்ட சச்சின்!
- VIDEO: 'விட்டா அடிச்சிருவாரு போல'!.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை... களத்திலேயே கழுவி ஊற்றிய அஃப்ரிடி!
- 'இங்கிலாந்தில் திடீரென கொளுத்தும் வெயில்!.. ப்ளானை மாற்றும் இந்திய அணி!.. அனல் பறக்கப் போகும் அஷ்வின் - ஜடேஜா கூட்டணி'!
- ‘அடுத்த ஆட்டத்துக்கு நாங்க ரெடி’!.. பிசிசிஐ வெளியிட்ட போட்டோ.. ஆச்சரியத்தில் சர்வதேச கிரிக்கெட் அணிகள்..!