'ரோஹித் ஷர்மா விக்கெட் ஒரு மேட்டரே இல்ல'!.. 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில்... நியூசிலாந்தின் வியூகத்தை வெளியிட்ட ஸ்டைரிஸ்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு காத்திருக்கும் சவால் குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த 2 தனித்தனி தொடரிலும், ஓப்பனராக களமிறங்க உள்ளார், ரோஹித் ஷர்மா.
ஒருநாள், டி20 போட்டிகளில் விளாசித் தள்ளும் ரோஹித், இதுவரை தன்னை டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக நிரூபித்ததில்லை. இந்திய கண்டிஷன்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் திணறும் ரோஹித், வெளிநாடு கண்டிஷன்களிலும் பெரிதாக ஒன்றும் செய்ததில்லை. எனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ரோஹித் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் ஐடியா இருந்தது. தெளிவான புரிதலும், திட்டமிடலும் இருந்தது.
ரோஹித்தின் வெளிநாடு டெஸ்ட் ஆட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவுக்கு வெளியே இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 945 ரன்கள் எடுத்துள்ளார். பெஸ்ட் ஸ்கோர் 79. ஆவரேஜ் 27.00. குறிப்பாக, இங்கிலாந்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். இரு இன்னிங்சிலும் சேர்த்து 34 ரன்கள். இவரது சிறந்த ஸ்கோரான 79 இலங்கையில் அடித்தது தான்.
இந்த நிலையில், இங்கிலாந்தின் ஸ்விங் கண்டிஷனில், ரோஹித் தடுமாறுவார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சில் எந்த ரகசியமும் இல்லை. அந்த அணியில் சவுதி, போல்ட் மற்றும் மூன்றாவது ஃபாஸ்ட் பவுலராக ஜேமீசன் அல்லது டி கிராண்ட்ஹோம் இருப்பார்கள். அதேசமயம், நீல் வாக்னர் களத்திற்கு வர வாய்ப்புள்ளது. நீல் வாக்னரின் ஆக்ரோஷம், புதிய பந்து எடுக்கப்படும் வரை, மிடில் ஓவர்களில் விராட் கோலியைப் போன்ற ஒருவரின் விக்கெட்டை எடுப்பது அவருடைய திறமையாகும்.
ரோஹித்தை பொறுத்தவரை, பிட்ச் தான் அவரது ஆட்டத்தை முடிவு செய்யும். அதற்கு மேல் இதில் பேச ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். பந்து அதிகம் ஸ்விங் ஆகிறது என்றால் ரோஹித் பெரும் போராட்டத்தை சந்திப்பார் என்றே நினைக்கிறன். ஏனெனில், ரோஹித் தனது இன்னிங்சில் ஆரம்பத்தில் தனது கால்களை பெரிதாக நகர்த்தமாட்டார் என்று தெரியும். எனவே, ஸ்விங் இருந்தால் நிச்சயம் இறுதிப் போட்டி அவருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம்" என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தலையில் பலத்த காயம்!.. 'சில' நினைவுகளை இழந்த டு பிளசிஸ்'!.. அந்த அளவுக்கு பாதிப்பா என்றால்.. உண்மையில் நடந்தது என்ன?
- 'ரசிகரா?.. ஆதரவாளரா'?.. திடீரென 'விராட் கோலி' புகைப்படத்தை பகிர்ந்த 'ஜான் சீனா'!.. ஏன்?
- VIDEO: ஃபீல்டிங் செய்யும் போது... சக வீரருடன் மோதி... மைதானத்திலேயே சுருண்டு விழுந்த டு ப்ளசிஸ்!.. மருத்துவமனையில் அனுமதி!
- என்ன இந்திய அணி ஓப்பனிங் ஜோடில இவ்வளவு சிக்கலா!?.. நெருங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்... கோலிக்கு வந்த பூதாகர தலைவலி!
- சரண்டரான இங்கிலாந்து!.. வெறித்தனமான form-ல் ட்ரெண்ட் போல்ட்!.. கேப்டன் கோலி அலெர்ட்!.. இந்திய அணியின் ப்ளான் என்ன?
- 'அந்த வலி இருக்கே... அது எனக்கு மட்டும் தான் தெரியும்'!.. 'Squad-ல் இடம்பெற்ற அனைவருக்கும் வாய்ப்பு'!?.. டிராவிட் மாஸ்டர் ப்ளான்!
- '2 முறை தவறிப் போன வாய்ப்பு'!.. தடைகளை தகர்த்து... இந்திய ஜெர்சியில் களமிறங்கும்... தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி!.. பிசிசிஐ முடிவின் பின்னணி என்ன?
- இலங்கை தொடரில்... மிகவும் எதிர்பார்த்த கேப்டன் பதவி!.. கை நழுவிப் போனது எப்படி?.. ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நிராகரித்தது ஏன்?
- இந்திய அணிக்கு ‘புதிய’ கேப்டன்.. வெளியானது இலங்கை தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- "தோனி மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தா... இப்போ நடக்குறதே வேற"!.. தோனி கேப்டன்சி ஃபார்முலா!.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் விளக்கம்!