'கோலி, ரோகித் விட... இவர் தான் இந்திய அணியின் சொத்து!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் game changer'!.. முன்னாள் வீரர் திட்டவட்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரராக இருக்கப் போவது யார் என்பது குறித்து டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில், இந்திய அணியின் லோ-ஆர்டரில் முதுகெலும்பாக இருக்கப் போகும் இரு வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட், மற்றொருவர் ரவீந்திர ஜடேஜா. உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில், முச்சதம் (triple century) வரை விளாசியவர் ஜடேஜா. நல்ல ஆவரேஜ் வைத்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 51 போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா, மொத்தம் 1,954 ரன்கள் அடித்துள்ளார். ஆவரேஜ் 36.18. பெஸ்ட் ஸ்கோர் 100 (நாட் அவுட்).
வெளிநாடு டெஸ்ட் தொடர்களில் அவர் மொத்தம் 18 போட்டிகளில் விளையாடி, 748 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 32.52. பெஸ்ட் ஸ்கோர் 86 (நாட் அவுட்). குறிப்பாக, இங்கிலாந்தில் அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் அடித்த 86* பெஸ்ட் ஸ்கோர் இங்கிலாந்தில் தான். அதுமட்டுமின்றி, இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 233 ஓவர்கள் வீசியிருக்கிறார். அதில் 28 மெய்டன் ஓவர்கள். 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பெஸ்ட் 4/79. மொத்தமாக, இங்கிலாந்தில் ஜடேஜா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்த சீசனில் ஜடேஜாவின் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது. பந்தை சரியாக க்ளீயர் செய்கிறார். அட்டாக் செய்கிறார். பந்தை சுழற்றி விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். ஃபீல்டிங்கில் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். அதனால், இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். நிச்சயம் இவர் நியூசிலாந்துக்கும், இங்கிலாந்துக்கும் கடினமான வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என்கிறார். இதுகுறித்து அவர், நீங்கள் எந்த வடிவத்தில் விளையாடினாலும், பந்து வீச்சாளர்கள் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பவுலர்கள் அதிகம் விக்கெட் எடுத்தால், அந்த அணி போட்டியில் வெற்றிப் பெறும். ரவீந்திர ஜடேஜாவைப் பற்றி பேசினால், அவர் ஒரு முப்பரிமாண வீரர். அவரைப் போன்ற ஒரு வீரரை நீங்கள் வெளியே வைத்திருக்க முடியாது. அவர் நிச்சயம் அணியில் விளையாட வேண்டும்.
சரியான இடைவெளியில் அவர் உங்களுக்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தித் தருவார். அதே சமயம், அவர் லோ - ஆர்டரில் பல ரன்களை எடுத்துக் கொடுக்கிறார். தேவையான நேரத்தில் பார்ட்னர்ஷிப் உருவாக்குகிறார். அவரது அபார ஃபீல்டிங் மூலம் கிடைக்கும் ரன் அவுட்கள் கூட அணியை பாதிக்கும். எனவே, ஜடேஜா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மிகுந்த மதிப்புமிக்க வீரராக இருக்கப் போகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
'எப்படியும் உன் கல்யாணத்தை நடத்திருவேன் மா'... 'தைரியமா இரு'... மகளுக்காக வேற லெவலில் யோசித்த தந்தை!
தொடர்புடைய செய்திகள்
- 'சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்து'!.. டி20 தொடர்கள் மீது... டு ப்ளசிஸ்க்கு இவ்வளவு கோபம் ஏன்?.. என்ன நடந்தது?
- ‘கப்பு முக்கியம் பிகிலு’!.. தனி ஒருவனாக வெறித்தனமான ப்ராக்டீஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
- 'என்ன நடந்தாலும்... 'அந்த' 2 பேர மட்டும் விட்ராதீங்க'!.. 'நியூசிலாந்தின் 'இந்த' பலவீனம்!.. இந்திய அணிக்கு செம்ம வாய்ப்பு'!
- 'மன்னிப்பே கிடையாது'!.. 8 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறு!.. தோண்டி எடுத்த நிர்வாகம்!.. சாதனை நாயகன் அதிரடி நீக்கம்!
- விவிஎஸ் லக்ஷ்மண் கூட ‘இதைதான்’ சொன்னாரு.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துக்கு இருக்கும் ‘சாதகமான’ சூழல்.. யுவராஜ் சிங் அதிரடி கருத்து..!
- ‘இது என்ன புது என்ட்ரியா இருக்கு’!.. டி20 உலகக்கோப்பையை நடத்த திடீரென ‘ஆர்வம்’ காட்டும் நாடு.. பிசிசிஐக்கு எழுந்த சிக்கல்..!
- ஊரே 'தலையில' தூக்கி வச்சு கொண்டாடுறாங்க...! 'ஏன்'னு எனக்கு புரியவே இல்ல...!- 'இந்திய' வீரர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன 'கருத்தால்' பரபரப்பு...!
- "இந்த விஜயகாந்த் 'Song' தான் 'ஜடேஜா'வோட ஃபேவரைட்.." 'சுவாரஸ்ய' தகவல் பகிர்ந்த 'அஸ்வின்'!.. "அட, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!"
- ‘தோனியை பத்தி ஒரு வார்த்தையில சொல்லுங்க’.. இன்ஸ்டாகிராமில் ‘கேள்வி’ கேட்ட ரசிகர்.. யாரும் எதிர்பார்க்காத பதிலளித்த ரஷீத் கான்..!
- 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... இந்தியாவின் பவுலிங் சூப்பர்ஸ்டார் 'இவர்' தான்!.. கண்டிப்பா டீம்ல எடுக்கணும்'!.. முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!