'என்ன நடந்தாலும்... 'அந்த' 2 பேர மட்டும் விட்ராதீங்க'!.. 'நியூசிலாந்தின் 'இந்த' பலவீனம்!.. இந்திய அணிக்கு செம்ம வாய்ப்பு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணியின் பவுலிங் ஆர்டர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் களம் எப்படி இருக்கும், வானிலை எப்படி இருக்கும் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இங்கிலாந்து களம் வழக்கமாக வேகப் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். பிட்ச்-இல் புற்கள் அதிகளவில் இருக்காது என்பதால் பந்தில் நல்ல ஸ்விங்கும், பவுன்ஸும் இருக்கும். இதன் காரணமாக இரு அணிகளின் பந்துவீச்சு பலம் குறித்த ஒப்பீடுகள் மற்றும் பலத்தை முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி இந்திய அணி 5 பவுலர்களை வைத்துக்கொண்டு களமிறங்க வேண்டும். அதில், அஷ்வின் மற்றும் ஜடேஜா கண்டிப்பாக இடம்பிடிக்க வேண்டும். மீதம் இருக்கும் 3 இடங்களில் வேகப் பந்துவீச்சாளர்களை நிரப்பலாம். ஸ்பின் அட்டாக்கில் சிறந்து விளங்கக்கூடிய ஆசிய நாடு ஒன்றும் நமக்கு எதிரணியாக வரவில்லை. நியூசிலாந்துதான் உள்ளது. எனவே, அதனை பயன்படுத்தி அச்சுறுத்த வேண்டும்.
இங்கிலாந்து போன்ற களத்தில் சுழற்பந்துவீச்சு சிறிது கடினம் தான். ஆனால், பவுலிங்கில் அதிகளவில் வித்தியாசம் (variation) காட்டினால் நிச்சயம் பயனளிக்கும். அந்த வகையில் அஷ்வின் - ஜடேஜா சிறப்பாக ஓவர் வீசக்கூடியவர்கள். அந்த களத்தில் புற்களை பார்க்க முடியாதுதான். ஆனால், ஒருவேளை புற்கள் சிறிது இருந்துவிட்டால் ஸ்பின்னர்களை தைரியமாக அனுப்பலாம்.
மேலும், பேட்டிங் வரிசையை பொறுத்தவரை ரிஷப் பண்ட்-ஐ 6வது இடத்தில் களமிறக்க வேண்டும். அஷ்வின் 7வது இடத்திலும், ஜடேஜா 8 இடத்திலும் களமிறக்க வேண்டும். அதன் பிறகு 3 வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வரவேண்டும். இதுதான் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு சரியான அணியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரே 'தலையில' தூக்கி வச்சு கொண்டாடுறாங்க...! 'ஏன்'னு எனக்கு புரியவே இல்ல...!- 'இந்திய' வீரர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன 'கருத்தால்' பரபரப்பு...!
- "இந்த விஜயகாந்த் 'Song' தான் 'ஜடேஜா'வோட ஃபேவரைட்.." 'சுவாரஸ்ய' தகவல் பகிர்ந்த 'அஸ்வின்'!.. "அட, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!"
- 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... இந்தியாவின் பவுலிங் சூப்பர்ஸ்டார் 'இவர்' தான்!.. கண்டிப்பா டீம்ல எடுக்கணும்'!.. முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
- 'இதுவரை யாரும் பார்க்காத... ரோகித்தின் இன்னொரு முகம்'!.. 'டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக புதிய அவதாரம்'!.. அசந்து போன பயிற்சியாளர்!
- 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் final பக்கத்துல வந்துருச்சு'!.. சீக்கிரம் 'அந்த' தவறை திருத்துங்க கோலி'!.. முன்னாள் வீரர் கண்டுபிடித்த முக்கிய மிஸ்டேக்!
- "அந்த ஒரே ஒரு 'விஷயம்'.. அதுல தான் 'இந்தியா'வ விட நியூசிலாந்து 'strong'ஆ இருக்கு.." 'பிரட் லீ' சொன்ன 'காரணம்'.. "நமக்கு இன்னும் 'பயிற்சி' வேண்டுமோ??"
- 'இந்த சின்ன விஷயத்துக்கு கூட அனுமதி இல்லை'!.. கடுமையான குவாரண்டைன்!.. இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து கெடுபிடி!
- 'அசாத்திய பவுலிங் திறமை இருந்தும்... அடுத்த போட்டிக்கு வாய்ப்பு இல்லை'!?.. கெஞ்சும் இளம் வீரர்!.. கொந்தளிப்பில் இங்கிலாந்து கிரிக்கெட்!
- 'நான் இல்லாம டெஸ்ட் சாம்பியன்ஷிப்பா'!?.. 'Never!'.. வேற லெவல் சம்பவத்துக்கு தயாராகும் தினேஷ் கார்த்திக்!.. ஏன் இந்த திடீர் முடிவு?
- இங்கிலாந்து டூர்... மும்பையில் தங்கியிருந்த இளம் வீரரை கழற்றிவிட்ட இந்திய அணி!.. ஆசை காட்டி மோசம் செய்ததா பிசிசிஐ?