'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... 3 இறுதிப்போட்டிகளா'?.. கடைசி நேரத்தில் குண்டை தூக்கி போட்ட ரவி சாஸ்திரி!.. அதிர்ந்து போன இந்திய வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வரும் சூழலில் ரவி சாஸ்திரி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று இரவு தனி விமானம் மூலம் இங்கிலாந்து பறக்கிறது.

டெஸ்ட் தொடரையும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் புதிய தொடரை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது ஐசிசி அமைப்பு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகளுக்கு இடையே நடந்து வந்த இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இறுதிப்போட்டிகாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஸை தேர்வு செய்வதற்கு ஒரே ஒரு இறுதிப்போட்டிக்கு பதிலாக 3 போட்டிகள் கொண்ட இறுதிப்போட்டி தொடராக நடத்த வேண்டும் என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதாவது 3 டெஸ்ட் போட்டிகள் வைத்து அதில் அதிக வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் கொடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். 

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது மிகவும் நெடுந்தொடராகும். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல அணிகள் பங்கு பெற்றுள்ளன. எனவே, இதன் முடிவை தீர்மானிக்க 3 இறுதிப்போட்டி இருக்க வேண்டும். ஆனால் அடுத்தடுத்த தொடர்கள் இருப்பதால் அது சாத்தியமில்லாமல் உள்ளது. அதனால் ஒரே ஒரு போட்டியில் தீர்மானிக்க வேண்டியுள்ளது. 

இதுதான் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி. இது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது. இந்திய அணி வீரர்கள் போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளது. எல்லாமே ஓர் இரவில் வந்துவிடவில்லை. இந்த வடிவ கிரிக்கெட் போட்டி வீரர்களை சோதித்து பார்க்கும். ஆனால், இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர்கள் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்