டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்திய அணியில் யார் யார் விளையாட வேண்டும்?.. ப்ளேயிங் 11-ஐ வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ கணித்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இறுதிப்போட்டி தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து ரசிகர்கள் கணிக்க தொடங்கிவிட்டனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான அசத்தல் வெற்றிகளுக்கு பிறகு இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் கண்டிப்பாக வென்றுவிட வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பேட்டிங் வரிசை தெளிவாக உள்ள சூழலில் பவுலிங்கில் யார் யார் களமிறங்குவார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். பேட்டிங் வரிசையில் பெரும்பாலானோரின் கணிப்பையே ஆகாஷ் சோப்ராவும் பிரதிபலித்துள்ளார். அதன்படி, ஓப்பனிங்கிற்கு சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடி, அதன் பிறகு புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்கியா ரஹானே ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. மாறாக ரிஷப் பண்ட் 6 வது வீராக களமிறங்குவார் என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது. ஏனெனில், இங்கிலாந்து களம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு உதவக்கூடியதாகும். அந்த வகையில் இந்தியாவின் ப்ளேயிங் 11-ல் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி கண்டிப்பாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது. ஆனால், 3வது பவுலராக முகமது சிராஜ் இருப்பாரா அல்லது சீனியர் வீரர் இஷாந்த் சர்மா இருப்பாரா என்ற கேள்வி நிலவுகிறது. இந்நிலையில் அந்த இடத்திற்கு இஷாந்த் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் கணிப்பை தான் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதன்படி ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா என இருவரையும் தனது ப்ளேயிங் 11ல் சேர்த்துள்ளார். இங்கிலாந்தில் சுழற்பந்துவீச்சு எந்த அளவிற்கு எடுபட போகிறது என்பது இன்னும் சந்தேகத்திலே தான் உள்ளது. 

ஆகாஷ் சோப்ராவின் ப்ளேயிங் 11:

சுப்மன் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஷ்வின், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்