இந்திய வீரரை மிரட்டிய பத்திரிகையாளர்.. ஒண்ணு கூடிய முன்னாள் வீரர்கள்.. "என்ன தான்'ங்க நடக்குது??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி 20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இதற்கான இந்திய அணியும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், புஜாரா மற்றும் ரஹானே ஆகிய சீனியர் வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை.
அதே போல, மற்றொரு சீனியர் வீரர் விரித்திமான் சஹாவின் பெயரும் இடம்பெறாமல் போயிருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுடன் பேக்கப் விக்கெட் கீப்பராக சஹாவின் பெயர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும். ஆனால், இம்முறை, அவருக்கு பதிலாக இளம் வீரர் பரத் பெயர் இடம்பெற்றுள்ளது.
விரித்திமான் சஹா
தொடர்ந்து, இந்திய அணியில் தேர்வாகாமல் போனது பற்றி பேசியிருந்த சஹா, 'கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நான் சிறப்பாக ஆடிய போது, பிசிசிஐ தலைவர் கங்குலி, "நான் பிசிசிஐயில் இருக்கும் வரை, நீயும் இந்திய அணியில் இருப்பாய்" என கூறியிருந்தார். ஆனால், அதற்குள் எனது பெயர் இடம்பெறாமல் போய் விட்டது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட, ஓய்வு பெறுவது குறித்து ஆலோசிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்' என சஹா தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இது பற்றி பேசிய டிராவிட், எனது வீரர்களிடம் நான் எதையும் வெளிப்படையாக தெரிவிக்க விருப்பப்படுகிறேன் என்றும், இந்தாண்டு டெஸ்ட் போட்டிகள் குறைவாக இருப்பதால், இளம் வீரர்களைத் தயார் செய்யும் நோக்கில் தான் சஹாவிடம் அப்படி கூறினேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பத்திரிகையாளர் மிரட்டல்
இந்நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டியதாக தனக்கு அனுப்பிய மெசேஜ் பற்றி, ட்வீட் ஒன்றை சஹா பகிர்ந்துள்ளார். பத்திரிகையாளர் ஒருவர், சஹாவிடம் பேட்டி கேட்க, இதற்கு சரிவர அவர் பதிலளிக்காததால், அந்த நபர் மிரட்டும் தொனியில் மெசேஜ் அனுப்பியுள்ளதும், சஹாவின் ட்வீட் மூலம் தெரிய வருகிறது.
'இந்திய அணிக்காக எனது பங்களிப்பை வழங்கிய பிறகு, மதிப்பிற்குரிய பத்திரிகையாளரிடம் இருந்து நான் எதிர்கொள்வது இது தான். ஜார்னலிசம் எங்கே போய்விட்டது' என சஹா குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளரின் மிரட்டல் குறித்து, சஹா ட்வீட் செய்த கொஞ்ச நேரத்தில், இணையத்தில் இந்த பதிவு அதிகம் வைரலாக தொடங்கியது.
ஒன்று கூடிய கிரிக்கெட் பிரபலங்கள்
இந்திய கிரிக்கெட் அணி பிரபலங்களான ரவி சாஸ்திரி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும், சஹாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். 'ஒரு பத்திரிகையாளரால், கிரிக்கெட் வீரர் மிரட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பிசிசிஐ இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். கிரிக்கெட் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்' என ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, அந்த பத்திரிகையாளர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என சஹாவிடம், ஹர்பஜன் சிங் கேட்டுள்ளார். இது என்ன வகையான ஜார்னலிசம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல, சேவாக், இர்பான் பதான் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்களும், சஹாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மீண்டும் சர்ச்சை
கடந்த ஆண்டு, கோலியை கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியிருந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, தற்போது சீனியர் வீரர் சஹா, டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டும் தொனியில் மெசேஜ் அனுப்பியுள்ள சம்பவம், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "30 பால்-ல 80 ரன் அடிக்கனும்னா..அவராலதான் முடியும்" - ஹர்பஜன் ஓப்பன் டாக்..!
- "செம பிளேயர் அவரு.. 'அரசியல்' பண்ணியே டீம்'ல இருந்து காலி பண்ணிட்டீங்க.." 'இந்திய' அணி பற்றிய புகாரால் பரபரப்பு
- 2011 WC அப்பறம்.. எங்கள Use and Throw மாதிரி நடத்துனாங்க.. இந்திய கிரிக்கெட்டின் சோக கதை.. புலம்பிய ஹர்பஜன் சிங்.. பின்னணி என்ன?
- தோனி, பிசிசிஐ குறித்து ஒரே interview.. மொத்த பர்னிச்சரையும் உடைத்த ஹர்பஜன் சிங்!
- 'நான் கேப்டன் ஆகாம போனதன் பின்னணியே இதான்'.. ஹர்பஜன் சிங்.. BCCI சீக்ரெட்ஸையே மொத்தமாக உடைச்சுட்டாரே மனுஷன்!
- "தோனி கிட்ட இந்த பழக்கமே கிடையாது.." அவரு ரொம்ப சிம்பிள்.. முதல் முறையாக மனம் திறந்த ரவி சாஸ்திரி
- கிரிக்கெட் பத்தி அவருக்கு எதுமே தெரியல.. 'கோலி' பெயரில் மோதிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - ரவி சாஸ்திரி
- "கங்குலி எந்த உலக கோப்பையை ஜெயிச்சு குடுத்து இருக்காரு??.." கோலியின் கேப்டன்சி விவகாரம்.. கடுப்பான ரவி சாஸ்திரி
- ஓய்வுக்கு பின்னால இருக்குற காரணம்?.. தோனி மேலயே குத்தம் சொன்ன ஹர்பஜன் சிங்.. பரபரப்பான சம்பவம்!
- கங்குலி - தோனி.. இருவரில் யார் பெஸ்ட்?.. மனம் திறந்த ஹர்பஜன் சிங்..