‘யாரென்று தெரிகிறதா?’... ‘பிசிசிஐ வெளியிட்ட வீடியோ’... ‘சொன்னதை அப்படியே செய்த கங்குலி’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், காயம் காரணமாக சேர்க்கப்படாமல் இருந்த 3 வீரர்களில், தற்போது டெஸ்ட் விக்கெட் கீப்பரான விருதிமான் சாஹா அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த அணியில், டெஸ்ட் விக்கெட் கீப்பரான விருதிமான் சாஹா, ஹிட்மேன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி பவுலர் இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக சேர்க்கப்படாமல் இருந்தனர். இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் சர்ச்சையை கிளப்பினர்.
இதனால் கடுப்பான பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி, அதற்கு முழு விளக்கம் அளித்து, காயம் குணமானதும், அவர்கள் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா அதிரடியாக களத்துக்கு திரும்பி உள்ளார். அவர், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு, வலைப்பயிற்சியில் யார் பேட்டிங் செய்கிறார்கள் என்று தெரிகிறதா என ட்விட்டரில் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
காயம் குணமாகிவிட்டதா என்று கூறாமல், வலைப்பயிற்சி மேற்கொள்ளுவதை அதிரடியாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னதாக விருதிமான் சாஹாவுக்கு இரண்டு தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு இருந்தது. அவரால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியுமா என்ற கேள்விக்கு, சாஹா நிச்சயம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என சவுரவ் உறுதியாக தெரிவித்து இருந்தார். அதன்படி விருதிமான் சாஹா தற்போது பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார்.
இந்திய அணி பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் தேறி வந்த அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விருதிமான் சாஹா தான் தற்போது உலகில் ஆடி வரும் டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர்களில் சிறந்த ரெக்கார்டு வைத்துள்ளார். அவர் இல்லாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கும். அதனால் அவரை விரைவாக தயார் செய்துள்ளது பிசிசிஐ. முன்பு இந்திய வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பயிற்சி சரியாக இல்லை என்ற குறை இருந்தது.
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி சாஹா நிச்சயம் தயார் ஆவார் என உறுதி கூறி அதை செயல்படுத்தியும் காட்டி உள்ளார். இதற்கிடையில், ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமியில், இஷாந்த் சர்மா காயம் காரணமாக சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்துவரும் நிலையில், தற்போது அங்கு ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா பயணிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே... அட... அவனும் 'இங்க' நான் தானே!'.. 'ஜாலி மூட்'-இல் கோலி!.. 'செம்ம'யா லாக் ஆன ரோஹித்!
- ‘நம் அனைவருக்கும்’... ‘அடுத்த ஆண்டு சிறப்பா இருக்கும்னு நம்புறேன்’... ‘ஏனெனில்’... 'கொரோனா தடுப்பூசி குறித்து’... ‘மத்திய அமைச்சர் தகவல்’...!!!
- ‘திடீரென அதிகரித்த கொரோனா பரவல்’... ‘6 நாட்கள் மட்டும்’... ‘மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு பிறப்பித்த நாடு’...!!!
- "'ரோஹித்' மட்டும் அந்த 'ஒரு' விஷயத்த பண்ணிட்டாரு.. அதுக்கப்புறம் இருக்கு..." அக்தரின் கருத்தால் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'!!!
- 'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு'!?.. 'இப்படி ஒரு 'மாஸ்டர் ப்ளான்' வச்சுருக்காங்களா'?.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!.. மாட்டிக்கிட்டு முழிக்கும் வீரர்கள்!
- 'இரண்டு வீரர்களுக்கு நிகரானவர் '... 'அவர் இந்திய அணியில் இல்லாதனால’... ‘எங்களுக்கு தான் சான்ஸ் ஜாஸ்தி’... ‘ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர் கருத்து’...!!!
- 'ஒரு வழியா முடிவுக்கு வரும் கொரோனா???'... 'அந்த லிஸ்ட்டுல இந்தியா தான் டாப்ல இருக்கு!!!'... 'வெளியான பெரும் நம்பிக்கை தகவல்!!!'...
- 'ஒரேயொரு Likeஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்!!!'...
- இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்!.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு!.. 'அடடே!.. ரசிகர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்'!.. என்ன நடந்தது?
- ‘இந்தப் போட்டிக்கே முக்கியத்துவம்’???... ‘வழக்கத்துக்கு மாறாக’... ‘பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்’... ‘வெளியான முக்கிய தகவல்’...!!!