‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி..’ உணவு இடைவேளைக்கு முன்பே முடிந்த ஆட்டம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாட்டிங்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இந்த அணியின் பந்துவீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 30 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்சமாக பகார் ஜமான், அசாம் தலா 22 ரன்கள் எடுத்தனர். 21.4 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். மே.இ.தீவுகள் அணியில் தாமஸ் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஸஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
106 ரன்கள் என்ற இலக்குடன் மே.இ.தீவுகள் அணியிலிருந்து கிறிஸ் கெயில், ஹோப் முதலில் களமிறங்கினர். ஹோப் 11 ரன்களிலும், பிராவோ ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கெயில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 34 பந்தில் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த நிகோலஸ் பூரானும் அதிரடியாக ஆடினார்.
மே.இ.தீவுகள் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் 3 மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தமாக மூன்றறை மணி நேரம் நடைபெற்ற ஆட்டம் 35 ஓவர்களே நீடித்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டி20 டைப்ல விக்கெட் எடு.. முடிஞ்சா மிட் ஆஃப்ல மோத சொல்லு', வீரருக்கு சச்சினின் வைரல் டிப்ஸ்!
- ‘6 வருஷத்துக்கு முன்னாடி சொன்னத இப்போ சொல்லி இருக்கலாம் பாஸ்’.. ஆம்லா தலையை பதம்பாத்த இங்கிலாந்து வீரர்!
- ‘டேவிட் வார்னர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா’?.. என்ன காரணம்?
- ‘உலகக்கோப்பைல எனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா’?.. மனம் திறந்த சச்சின்!
- ‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’!.. வைரல் வீடியோ
- ‘ஐபிஎல்-ல தோனிக்கு நடந்தது மாதிரியே இவருக்கும் நடந்திருக்கு’.. முதல் மேட்ச்சை பரபரப்பாக்கிய அந்த சம்பவம்!
- ‘உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து..’ ‘ஆட்டத்தின் ஹைலைட் நிமிடங்கள்..’
- ‘தொடங்கியது உலகக்கோப்பை’.. முதல் ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்து அதிரடி காட்டிய சிஎஸ்கே வீரர்..!
- சச்சின்..! சச்சின்..! உலகக்கோப்பையில் மீண்டும் ஒலிக்க போகும் குரல்..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
- ‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை!