‘கொஞ்சம் கவணமா இருந்திருக்கலாம் கோலி’.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று இன்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினர். இதில் கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா கூட்டணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் ரோஹித் சர்மா சதம்(140) அடித்து அசத்தினார்.

இப்போட்டியின் நடுவே திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது. இதனை அடுத்து மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கியது. அப்போது விராட் கோலி மற்றும் விஜய் சங்கர் களத்தில் இருந்தனர். இதில் கோலி 77 ரன்கள் எடுத்திருந்தபோது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீரின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் ரீ-வியூ செய்து பார்த்ததில் (பந்து பேட்டில் படவில்லை) அது நாட் அவுட்டாக இருந்தது. இது கோலிக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களிடையேயும் ஏமாற்றத்தை அளித்தது.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, INDVPAK, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்