‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா? .. சூசகமாக சொன்ன கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக விளையாடும் வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது எதிர்பாரதவிதமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்போதே போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் விளையாடினார்.
இதனை அடுத்து காயம் சரியாகததால் அடுத்து நடைபெற உள்ள சில போட்டிகளில் புவனேஷ்வர்குமார் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. காயத்தின் அளவு சிறியதாக இருப்பதால் புவனேஷ்வர்குமார் விரைவில் அணிக்கு திரும்புவார் என கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் கோலி தெரிவித்தார்
இந்நிலையில் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக அடுத்த சில போட்டிகளில் விளையாட வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடக்கத்திலேயே பௌலிங்கா?'... 'ஆச்சரியத்தில் மூழ்கிய வீரர்'!
- ‘போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் வீரர்கள் செய்த காரியம்..’ காட்டமான ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக் விளக்கம்..
- 'சொந்த நாட்டுக்கு திரும்பணுமா?'.. 'அப்ப சொல்ற மாதிரி செய்யுங்க'.. எச்சரித்த கேப்டன்!
- 'மனுஷன்னா விராட் கோலிதான்யா'... 'அவர் அப்படி செய்வாருனு எதிர்பார்க்கலை'!
- ‘அந்த பயம் இருக்கணும்ல..’ ‘இந்தியாவை எதிர்கொள்ளவே பயப்படும் அணிகள்..’ பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்..
- ‘21 வருஷத்துக்கு அப்றம் இப்டி நடந்திருக்கு’.. ஸ்டெம்பில் பட்டும் ‘நாட் அவுட்’.. வைரலாகும் வீடியோ!
- ‘நாங்க எல்லாம் அப்போலிருந்தே இப்படி தான்..’ வைரலாகும் விராட் கோலியின் சிறுவயது ஃபோட்டோ..
- '104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது?... அதிர்ச்சி சம்பவம்!
- மறுபடியும் ஒரு சோதனையா..! காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!
- ‘என்ன பாண்ட்யா இப்டி பண்ணிட்ட’.. கேப்டனுக்கே இந்த நிலைமையா!.. வைரலாகும் வீடியோ!