‘உலகக்கோப்பையில எனக்கு நடந்தது மாதிரி விராட் கோலிக்கு நடக்க கூடாது’.. முன்னெச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் உலகக்கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. மே 30 தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பையில் இந்திய அணி ஜூன் 5 -ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக 25 -ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தையும் மே 28 -ம் தேதி வங்கதேசத்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் முந்தைய உலகக்கோப்பையில் விளையாடிய போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில்,‘ஒரு சில போட்டிகளில் மட்டும் சில வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவர்கள். ஒரு தனிப்பட்ட வீரரை வைத்து மட்டும் ஒரு தொடரை வெல்ல முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அணியில் உள்ள மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் 1996, 1999, 2003 உலகக்கோப்பை எனக்கு ஏற்பட்ட பாரம்போல விராட் கோலி நடக்க வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சச்சின்,‘நான்காவது ஆர்டர் என்பது என்னை பொறுத்தவரை அதுவெறும் நம்பர்தான். நம் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். எந்த ஆர்டரில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவார்கள். அப்போது சூழ்நிலையை புரிந்து விளையாட வேண்டும். இந்த வருடம் உலகக்கோப்பையை வெல்ல நமக்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோலி மறைமுகமா சொன்னத இவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு’.. காத்திருப்போம்!
- ‘இவருதான் பெஸ்ட் வீரர்! உலகக்கோப்பைல கலக்குவாரு பாருங்க’!.. பிரபல வீரரை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
- 'வானத்தை போல'... 'படத்தை போல தான் நாங்க'... எங்களுக்குள்ள 'போட்டி எல்லாம் இல்ல'!
- ‘பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதபோவது யார்’?.. அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
- 'ஐபிஎல்ல மிஸ் ஆயிடுச்சு.. ஆனா வேர்ல்டு கப்ல என் டார்கெட் கோலிதான்'!
- ‘பல அதிரடி மாற்றங்களுடன் இறுதிப்பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து’.. சவாலை சமாளிக்க காத்திருக்கும் இந்தியா!
- ‘உலகக் கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவரு தான்..!’ புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்..
- 'நம்மூருக்கு வராங்க.. 2 பேரையும் டீசன்ட்டா ட்ரீட் பண்ணனும்..ஓகே?'.. ரசிகர்களுக்கு வீரரின் அன்புக்கட்டளை!
- ‘தூண் மாதிரி நம்மகிட்ட 2 பேர் இருக்காங்க’..‘அந்த கடைசி 10 ஓவர்தான்’.. புறப்படும் டீம் இந்தியா!
- ‘என்ன நடந்தாலும் சரி தோனி எங்களுக்கு வேணும்..’ அவர் சொல்றத தான் நாங்க கேப்போம்..