‘தவான் இடத்த நிரப்ப இவர்தான் சரியான ஆள்’.. அதிரடி வீரரை கன்ஃபார்ம் பண்ணிய ஐசிசி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக விலகியுள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக விளையாட ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது ஷிகர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் காயத்துடன் அப்போட்டியில் விளையாடி 117 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் அடுத்து நடைபெறும் சில போட்டிகளில் தவான் விளையாடமாட்டார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவித்தார். ஆனால் காயம் குணமடைய அதிக நாளாகும் என்பதால் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
முன்னதாக தவான் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக விளையாட இளம் வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அழைக்கப்பட்டார். தற்போது தவான் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளதால் ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். அதனால் இனி வரும் போட்டிகளில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 -வது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து வரும் சனிக்கிழமை(22.06.2019) சவுதாம்டன் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தொடர் தோல்வியால் விரக்தியடைந்த வீரர்கள்..’ ஹோட்டலில் ஃபோட்டோ எடுத்தவர்களுடன் செய்த தகராறால் பரபரப்பு..
- ‘உலகக் கோப்பை போட்டிக்கான ஸ்பெஷல்‘... ‘ரகசியம் உடைத்த இந்திய வீரர்‘!
- ஐய்யோ..! ‘உலகக்கோப்பையில் இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
- 'காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள்'... 'பாகிஸ்தான் ரசிகர்களின் வைரல் போட்டோ'... உண்மை என்ன?
- ‘அடப்பாவமே பாகிஸ்தானுக்கு இப்டியொரு சோதனையா’.. ‘கடைசியில இப்டி இறங்கிட்டாங்களே’!
- ‘இவ்ளோ செஞ்சும் அவர தடுக்க முடியலையே’.. ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான இங்கிலாந்து கேப்டன்!
- ‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா? .. சூசகமாக சொன்ன கோலி!
- 'தல தோனியை விட சரியாக கணித்த விராட் கோலி'... 'முதல்முறையாக தவறு செய்த தோனி?'
- 'தொடக்கத்திலேயே பௌலிங்கா?'... 'ஆச்சரியத்தில் மூழ்கிய வீரர்'!
- ‘போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் வீரர்கள் செய்த காரியம்..’ காட்டமான ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக் விளக்கம்..