காயம் சரியாகததால் விலகும் நட்சத்திர வீரர்..! மற்றொரு வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாசாத் காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
12 -வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30 -ம் தேதி தொடங்கிய லீக் சுற்றில், இதுவரை 10 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய இரு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர வீரருமான முகமது ஷாசாத் காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது முகமது ஷாசாத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் உலகக்கோப்பை லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் முகமது ஷாசாத் விளையாடினார்.
இதனால் காயத்தின் வீரியம் அதிகமாகியதால் முகமது ஷாசாத் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முகமது ஷாசாத்-க்கு பதிலாக இக்ராம் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நேசமணிக்கு அடுத்து உலகளவில் டிரெண்டான ஹேஷ்டேக்’.. ‘தல’ க்ளவுஸ் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
- 'முட்டாள்கள்'... 'கிரிக்கெட் விளையாட போனாரா'?...'இல்ல,போருக்கு போனாரா'?...'தோனி' மீது பாய்ச்சல்!
- ‘என்னய்யா இப்டியெல்லாம் கேட்ச் புடிக்கிறீங்க’.. ‘ஜடேஜாவுக்கே டஃவ் கொடுப்பாரு போல’
- 'என்னடா இது போங்கு ஆட்டமால இருக்கு'... 'இப்டிகூட அவுட் பண்ணலாமா?'... அம்பயரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
- 'தோனியின் க்ளவுஸ்க்கு ஐசிசி தடையா?'... அதிர்ந்த 'தல' ரசிகர்கள்!
- ஐபிஎல்-ல மனசுல வச்சிக்கிட்டு இப்டியா பழிவாங்கறது’.. முதல் பந்தே விராட் கோலியின் தலைக்கு குறிவைத்த ரபாடா!
- ‘ஆரம்பமே 2 புதிய உலக சாதனை..’ உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!
- மனசுல நின்னுட்டீங்க ‘தல’.. ‘இது ஒன்னு போதும் நீங்க யாருனு சொல்ல’.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
- 'அப்ப அப்பாவோடு நான் இல்ல.. 'இப்போ நானிருக்கிறேன்.. வைரலாகும் ஸிவா தோனி'!
- 'தல' ஏன் அப்படி பண்ணுனாரு?'...'அதுக்கு பின்னால ரகசியமே இருக்கு'... 'ரகசியம் உடைத்த ஊழியர்'!