‘ரொம்ப நாள் எதிர்பார்த்தேன்’.. ‘இப்போதான் கனவு நெஜமாயிருக்கு’.. உலகக் கோப்பை குறித்து தமிழக வீரர் உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை தொடரில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார்.
12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அம்பட்டி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் உலகக் கோப்பையில் விளையாட இடம் கிடைத்தது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார். அதில், ‘உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற எனது வெகுநாள் கனவு நனவாகியுள்ளது’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்பா ஒரு கட்சி...மனைவி வேற கட்சி'...பிரபல வீரரின் குடும்பத்திற்குள் புகுந்த அரசியல்!
- 'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்!
- 'பேட்டிங் மட்டுமல்ல'...நல்ல 'ஆல்ரவுண்டராவும்' இருப்பாரு...'திருநெல்வேலி' பையனுக்கு அடித்த ஜாக்பாட்!
- நல்ல பேட்டிங் ஆவரேஜ் இருந்தும் ஏன் இவர எடுக்கல?.. கேள்வி எழுப்பிய ஐசிசி!
- 'ரிஷப் இல்லை.. தினேஷ் உண்டு.. ராயுடு இல்லை.. ராகுல் உண்டு’..உலகக்கோப்பை இந்திய அணி.. தேர்வுக்குழு வியூகம்!
- ‘இனி உலகக் கோப்பையிலும் நம்ம விசில் சத்தம்தான்’.. இடம் பிடித்த 3 சிஎஸ்கே வீரர்கள்.. கொண்ட்டாடத்தில் ரசிகர்கள்!
- 'நாங்க இருக்கோம்'...'அசத்திய தமிழக வீரர்கள்'...வெளியானது உலகக்கோப்பை பட்டியல்!
- 'இது தான் உலகக்கோப்பைக்கான பட்டியல்'...'பிரபல வீரரின் சாய்ஸ்'...அவரை ஏன் எடுக்கல?
- இரண்டு 'தமிழக வீரர்களுக்கும்' இடம் கிடைக்குமா'?...'4வது ஆர்டர்'ல யாரு இறங்க போறாங்க?...வெய்டிங்!
- 'பேபி சிட்டர்' யாருன்னு உலககோப்பையில காட்டுறோம்'...கம்பிரமாக வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி!