‘உலகக்கோப்பை என் கையில இருக்கணும்’ ‘இதுக்காக 3 வருஷம் காத்திருக்கேன்’.. இந்திய வீரர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை கையில் ஏந்த ஆர்வமாக இருப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைபட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை(16.06.20190 நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதவுள்ள முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. இதனால் வருயிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘ஜூலை 14 -ம் தேதி என் கையில் உலகக்கோப்பை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இப்போதைக்கு இதுமட்டும்தான் என்னுடைய குறிக்கோள். நான் ஒரு ஜாலியான ஆள். என்ன நடந்தாலும் சந்தோஷமாக இருப்பதுதான் பிடிக்கும்’ என பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இங்கே வராதே, அங்கே போ!... இந்திய வீரரின் கெஞ்சல்!
- 'ஃபைனல்ஸ்க்கு வர்ற டீம் எது?' .. 'அது பேஸ்பாலா? கிரிக்கெட்டா?'.. அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு!
- ‘இது ஒன்னு போது நீங்க யார்னு சொல்ல’.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்!
- ‘மேட்ச் நடக்காதது நல்லதா போச்சு ’.. எதுக்காக கோலி இப்டி சொன்னாரு?
- ‘டாஸ் கூட போடாம ரத்தான போட்டி’.. மழையால் இந்தியாவுக்கு வந்த புதிய சிக்கல்!
- 'சென்னை ரசிகர்கள் ஏம்ப்பா பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்றீங்க?'... 'தடாலடி' பதிலளித்த சி.எஸ்.கே. அணி!
- ‘ஸ்பாட் ஃபிக்சிங்’.. ‘ரூம்ல வைச்சு கன்னத்தில பளார்னு ஒரு அடி’.. வெளியான பாகிஸ்தான் வீரர் ரகசியம்!
- 'மழையால் ஆட்டம் ரத்தா?'.. 'நோ சான்ஸ்'... 'ஐசிசி திட்டவட்டம்'!
- 'அவர் பொண்ணு இறந்து போச்சு'... 'அவரை ஒண்ணும் சொல்லாதீங்க'... வைரலாகும் வீடியோ!
- 'மேட்ச் நடக்குமா'...'நடக்காதா'?... 'மழை' வந்தா இந்தியாவுக்கு ...'பெரிய பிரச்னை இருக்கு' !