‘இவ்ளோ செஞ்சும் அவர தடுக்க முடியலையே’.. ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான இங்கிலாந்து கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்ஃகானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதமடித்து இங்கிலாந்து வீரர் இயன் மார்கன் உலகசாதனை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை லீக் சுற்றின் 24 -வது போட்டி இன்று(18.06.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்ஃகானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ மற்றும் வின்ஸ் களமிறங்கினர். இதில் வின்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜே ரூட் உடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் பேர்ஸ்டோ 90 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார்.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். இதில் 57 பந்துகளில் மின்னல் வேக சதமடித்து மார்கன் உலகசாதனை படைத்தார். மேலும் இப்போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மாவின்(16 சிக்ஸர்கள்) சாதனை முறியடித்தார். பின்னர் அதிரடியாக விளையாடி 71 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து மார்கன் அவுட்டாகினார். 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது. இப்போட்டியில் ஆப்ஃகானிஸ்தான் பந்து வீச்சாளர் ரஷித் கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை வாரி வழங்கினார்.

ICCWORLDCUP2019, ENGVAFG, EOINMORGAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்