‘தோனி இருந்தா நான் முதலுதவி பெட்டி’..‘காயம் ஏற்பட்டா அப்போ நான் பேண்டேஜ்’.. பிரபல வீரர் ஆதங்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் ஜூலை 14 -ம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பாக விளையாடும் வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

இதில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவருக்கு இடம் கிடைத்துள்ளது. ஆனால் அம்பட்டி ராயுடு, ரிஷப் பண்ட் போன்றோருக்கு இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நேற்று அம்பட்டி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலகக் கோப்பையை பார்க்க 3டி கண்ணாடியை ஆர்டர் செய்துவிட்டேன்’ என பதிவிட்டு தேர்வு குழுவை மறைமுகமாக சாடினார்.

இந்நிலையில் உலகக் கோப்பையில் தான் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில்‘உலகக் கோப்பையில் தேர்வாகியிருப்பதால் எனது நீண்ட நாள் கனவு நிஜமாகியுள்ளது. மேலும் உலகக் கோப்பையில் தோனி தான் விக்கெட் கீப்பராக இருப்பார். அவருக்கு காயம் ஏற்பட்டால், நான் முதலுதவி பெட்டி போல விக்கெட் கீப்பராக பயன்படுத்தப்படுவேன். என்னால் 4 -வது இடத்தில் இறங்கியும் சிறப்பாக ஆடமுடியும், அதேபோல் கடைசி கட்டத்தில் சிறந்த ஃபினிஷராகவும் செயல்படமுடியும்’ என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICCWORLDCUP2019, TEAMINDIA, MSDHONI, ICC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்