‘திடீரென ஏற்பட்ட காயம்’.. பாதியிலேயே வெளியேறிய இந்திய அணியின் முக்கிய வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று மான்செஸ்டர் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.

இப்போட்டியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 140 ரன்களும், அணியின் கேப்டன் விராட் கோலி 77 ரன்களும், கே.எல்.ராகுல் 57 ரன்களும் எடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவேஷ்வர்குமார் தனது 3 -வது ஓவரை வீசும் போது காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ICCWORLDCUP2019, INDVPAK, BHUVNESHWARKUMAR, INJURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்