‘24 வருஷத்துக்கு பிறகு மறுபடியும் இது நடக்கபோகுது’.. ஐசிசியின் அதிரடி அறிவிப்பு..! குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2022 -ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

வரும் 2022 -ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மகளிர் டி20 கிரிக்கெட்டை காமன்வெல்த்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

இதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான போட்டிகள் அனைத்தும் ஃபர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. முன்னதாக 1998 -ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் (ஆடவர்) இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா தங்கப்பதக்கம் வென்றது. இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

ICC, BCCI, COMMONWEALTH, T20, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்