ஓடாம 'ரன்' எடுத்தோம் ... 'சும்மா'வே உக்காந்து 'வின்' எடுத்தோம் ... முதன் முறையாக இந்திய மகளிர் அணி செய்த சாதனை !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெண்கள் உலக கோப்பை டி 20 போட்டி தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த அரையிறுதி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. சிட்னி மைதானத்தில், முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுவதாக இருந்தது.
இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் புள்ளிகள் அடிப்படையில் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெண்கள் டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இருபது ஓவரில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 13 ஓவர்களில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பதினெட்டே 'மேட்ச்' தான் ... 'உலக கோப்பை'யில் அதிரடி காட்டி ... முதலிடத்தை அடைந்த லேடி 'ஷேவாக்'
- "இந்த பொண்ணுக்கு பயம்னா என்னன்னே தெரியல..." "அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி..." 'அதிரடி' பேட்டிங்கில் 'பட்டையை' கிளப்பும் 'இளம் புயல்'... இந்திய அணியின் பவர் 'ரன்மெஷின்'...
- 'ஜூனியர் உலகக் கோப்பை'... 'முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு'... 'கிலியை உண்டாக்கிய’... ‘சின்னப் பையன்’... ‘சந்தோஷத்தில் குதிக்கும் ஐபிஎல் அணி’!
- ‘என்னோட கடைசி போட்டியை விளையாட போறேன்’.. ‘எனக்காக வந்து பாருங்க’.. தெரிவித்த பிரபல வீரர்..!