‘மோசமான சாதனையால் சோதனை’...!!! ‘தானாகவே வந்து வசமாக சிக்கிய வீரர்’...!!! ‘கட்டம் கட்ட காத்திருக்கும் பிசிசிஐ’...!!! 'இந்த நேரத்தில் இது தேவையா???

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித் சர்மாவை தேர்வு செய்யவில்லை என்று பிசிசிஐ  கூறியதால் சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது தானாகவே வந்து அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

ஐபில் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியபோது ஏற்பட்ட காயம் காரணமாக, ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பல போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்குள் அவர் அணிக்கு திரும்பி விடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்து இருந்தது.

ஆனால், அதற்குள் ஆஸ்திரேலிய தொடருக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதில், ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் ரோகித் சர்மாவுக்கு இடம் அளிக்கப்படாததால், பெரும் சர்ச்சை கிளம்பியது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐயை முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை கேள்விகளால் துளைத்து எடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தனக்கு காயம் இல்லை என நிரூபிக்க ரோகித் சர்மா முடிவு செய்தார். பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், அடுத்து ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் பங்கேற்று 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். அது பிசிசிஐக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது.

உடற்தகுதியுடன் இருக்கும் வீரரை அணியில் தேர்வு செய்யாதது ஏன் என பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தது பிசிசிஐ. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்ததாக ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர், தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.

அந்த டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி உள்ளார். ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், அஜின்க்யா ரஹானே ஆகியோருடன் 13 டக் அவுட்கள் ஆகி ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

அந்த அளவுக்கு மோசமான பார்மில் இருப்பதாக அவரே காட்டிக் கொண்டுள்ளது தான் இப்போது அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது. என்ன காரணம் சொல்லி ரோகித் சர்மாவை நீக்கியதை நியாயப்படுத்தலாம் என காத்திருக்கும் பிசிசிஐ-க்கு ரோகித் சர்மா தான் மோசமான பார்மில் இருப்பதாக காட்டியுள்ளார். இதை ஒரு சாக்காக பிசிசிஐ எடுக்கும் முன்னர், ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே பிசிசிஐ-யால் எந்த காரணமும் கூற முடியாது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்