'இதப் பத்தி மட்டுமே நினைச்சு விளையாடக் கூடாது’... ‘எது உண்மையான விளையாட்டு?’... ‘இளம் வீரர்களுக்கு அறிவுரை கூறும் முன்னாள் கேப்டன்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அண்டர்-19 மற்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளருமான  ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் தன்னுடைய 17 ஆண்டு கிரிக்கெட் கேரியரில் பொறுமையான தனது குணத்தால் மற்றவர்களை கவர்ந்தவர். மைதானத்தில் மட்டுமின்றி பொதுவெளிகளிலும் மிகவும் மரியாதைக்குரியவராக போற்றப்பட்டவர். சர்வதேச போட்டிகளில் 24,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர், எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காதவர்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல் டிராவிட் ‘இளம் வீரர்கள் முதலில் தங்களது விளையாட்டு, விளையாட்டு விதிகள், எதிரணியினர், பார்வையாளர்கள் மற்றும் தான் விளையாடும் விளையாட்டில் இணைந்துள்ள அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். 

ஏனெனில் இந்த மரியாதை, உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கான அர்த்தத்தை சேர்க்கிறது. வெற்றியை அடைவதற்கு விளையாட்டு வீரர்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றி, தோல்வி மற்றும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட்டை அணுக கூடாது. அவ்வாறு விளையாடினால் அது பிசினசாக மாறிவிடும்.

வெற்றி மற்றும் தோல்விகள் மட்டுமே ஒரு வீரர் குறித்த மதிப்பீட்டை தருவதில்லை. நிறைய இளைஞர்கள் சில சமயங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட திறமையை வீணாக்குவதைப் பார்க்கும்போது அது என்னை மிகவும் ஏமாற்றமடையச் செய்கிறது. அது என்னை ஏமாற்றமடையச் செய்கிறது. நீங்கள் விதிகளை பின்பற்றுவதால், அது உங்களை குறைந்த வீரராக மாற்றாது. அது உங்களை குறைந்த வீரராக மாற்ற வேண்டியதில்லை’ என்று இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட்டை அணுகுமுறை குறித்து கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்