‘வரலாற்று வெற்றி’.. பக்கத்துல ராஸ் டெய்லர்.. ஆனா கோலி ‘தோளில்’ சாய்ந்து வெற்றியை கொண்டாட காரணம் என்ன..? கேன் வில்லியம்சன் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதும் விராட் கோலியின் தோளில் சாய்ந்ததற்கான காரணத்தை கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

‘வரலாற்று வெற்றி’.. பக்கத்துல ராஸ் டெய்லர்.. ஆனா கோலி ‘தோளில்’ சாய்ந்து வெற்றியை கொண்டாட காரணம் என்ன..? கேன் வில்லியம்சன் உருக்கம்..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக கோப்பையை வென்று நியூஸிலாந்து அணி வரலாறு படைத்தது.

Williamson reveals why he rested his head on Kohli's shoulder

இப்போட்டியின் கடைசி நாளில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும்,  ராஸ் டெய்லரும் பேட்டிங் செய்தனர். அப்போது வெற்றிக்கான பவுண்டரியை கேன் வில்லியம்சன் அடித்ததும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றார். உடனே கேன் வில்லியம்சன், விராட் கோலியின் தோளில் சாய்ந்து வெற்றியை பகிர்ந்துகொண்டார். இந்த புகைப்படம் அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் Cricbuzz ஊடகத்துக்கு பேட்டியளித்த கேன் வில்லியம்சன், வெற்றி பெற்றதும் கோலியின் தோளில் சாய்ந்ததற்கான காரணம் குறித்து தெரிவித்தார். அதில், ‘இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அந்த தருணம் மிக சிறப்பாக இருந்தது. இந்தியாவுடன் எப்போது விளையாடினாலும் அது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எங்களது சிறந்த முயற்சியை தந்தாக வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்படவே செய்யும்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ராஸ் டெய்லருடன் கொண்டாடுவதற்கு பதிலாக கோலியின் தோளில் ஏன் சாய்ந்தேன் என கேட்கிறீர்கள். எனக்கும் விராட் கோலிக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டது. கிரிக்கெட்டையும் கடந்து ஒரு ஆழமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது. அது எங்கள் இருவருக்குமே தெரியும்’ என கேன் வில்லியம்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இப்போட்டியில் இரு அணிகளுமே மிகவும் சிறப்பாகவே விளையாடின. ஆட்டம் மிகவும் நெருக்கமாக இருந்தது. போட்டி முழுவதும் கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். இதுபோன்ற ஒரு கடினமான போட்டியில், ஒரு அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் மற்றொரு அணிக்கு அதிர்ஷ்டம் இருக்காது’ என வில்லியம்சன் கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அப்போது அரையிறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. ஆனாலும், அப்போது இருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்