'மேட்ச் நடக்குமா'...'நடக்காதா'?... 'மழை' வந்தா இந்தியாவுக்கு ...'பெரிய பிரச்னை இருக்கு' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலககோப்பையை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.இந்த போட்டியானது டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.இதனிடையே இந்த போட்டியானது மழையால் தாமதமாகும் என தெரிகிறது.

இரு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால்,இந்த போட்டியானது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் போட்டியில் மழை குறுக்கிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டிங்காமில் மழை பெய்துவருகிறது. அத்துடன் நாட்டிங்காம் நகரத்திற்கு ‘யெல்லோ அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் போட்டி தாமதமாகும் அல்லது ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டி ரத்தாகும் பட்சத்தில்,நியூசிலாந்து அணியை விட இந்திய அணிக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.ஏற்கனவே நடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருப்பதால்,அந்த அணிக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை.அதே நேரத்தில் போட்டி ரத்தாகும் பட்சத்தில்,இந்திய அணிக்கு ஒரு புள்ளியினை இழப்பது பின்னடைவாக கருதப்படுகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது.டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இதுவரை நியூசிலாந்து கடைசியாக விளையாடிய 5 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் எளிதாக இரண்டு புள்ளிகள் பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு மழையால் பறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ICCWORLDCUP2019, WORLDCUPINENGLAND, ICCWORLDCUP, NOTTINGHAM, NEW ZEALAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்