‘அட்லீஸ்ட் தோனி ரிட்டயர் ஆகும்போதாச்சும்’.. சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எழுந்த புது சிக்கல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசஞ்சய் மஞ்ச்ரேக்கரின் அதிகப்படியான வர்ணனை எதிரொலியாக, உலகக்கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கக் கோரி இணையதளத்தில் ஒரு கையெழுத்து இயக்கம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை லீக் போட்டிகளின் சமீபத்திய ஆட்டங்களில் தோனியின் பெர்ஃபார்மன்ஸ் அதிருப்தி தரும் விதமாக அமைந்ததாக, பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். சச்சினில் தொடங்கி, சவுரவ் கங்குலி வரை தோனியின் ஆட்டமுறைமையை பற்றிய கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.
எனினும் இவர்கள் சீனியர்கள் என்பதாலும், இன்ன பிற காரணங்களாலும் பெருவாரியான ரசிகர்கள், தோனியின் மீதான விமர்சனத்தை ஓரளவுக்காவது ஒப்புக்கொள்ளச் செய்தனர். வெகுசிலர் தோனியின் ஆட்டத்தில் உள்ள ப்ளஸ்களையும் முன்வைத்தனர். குறிப்பாக பும்ரா போன்ற வீரர்கள் தோனி அதிக பிரஷரை எடுத்துக்கொண்டு ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய பெஸ்ட் ஃபினிஷர் தோனி என்று கருத்து கூறினர்.
ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோனியை விமர்சிக்கும் வகையிலும், ரசிகர்கள் அதிருப்தி அடையும் வகையிலும் தொடர்ந்து கமெண்ட்ரி கொடுத்ததால் ரசிகர்கள் மட்டுமல்லாது, சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கடுப்பாகி உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பணிபுரியுபவரான ரசூல் இதுபற்றிய தனது ட்வீட்டில், ‘தோனி ஓய்வு பெற்றதன் பிறகாவது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கமெண்ட்ரியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னாச்சு ‘தல’க்கு..! இன்னைக்கு மேட்சல காயத்தோடுதான் விளையாடுவாரா?
- ‘இந்திய அணியைச் சீண்டி ட்விட்டர் பதிவு..’ முன்னாள் வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..
- 'மிடில் ஆர்டர்'ல விளையாட இவர் தான் சரி'... 'ஜாக்பாட் அடிக்குமா'?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
- 'அவர் நமக்காக தான் விளையாடுறாரு'... 'ஒரு போட்டில சரியா விளையாடலனா' ... உடனே திட்டுறதா?
- 'நீங்க சொதப்பிக்கிட்டே இருங்க'... 'இனிமேல் அவர் இறங்கட்டும்'... 'இந்திய அணியில்' அதிரடி மாற்றம்!
- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’..
- 'தோல்விக்கு' இதான் காரணம்.. 'அப்படி எத சொன்னாங்க?'.. முன்னாள் முதல்வரின் வைரல் ட்வீட்!
- ‘உண்மையில் அவருக்குக் காயம்தானா..?’ முன்னாள் வீரரின் ட்வீட்டால் ரசிகர்கள் சந்தேகம்..
- ‘உங்கள் நேர்மை சோதிக்கப்பட்டது.. அதில் தோற்றுவிட்டீர்கள்..’ இந்திய அணியை மறைமுகமாகச் சாடியுள்ள முன்னாள் வீரர்..
- ‘நீங்க எல்லாரும் தான அவரு வேணுனு கேட்டீங்க..’ போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய வீரர்..