‘இதை எதிர்பார்க்கவே இல்ல’!.. டாஸ் போட்ட பின் கோலி சொன்ன பதில்.. கொதித்த நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வலைதளங்களில் கேப்டன் கோலியை நெட்டிசன்கன் விமர்சனம் செய்து வருகின்றனர்.

‘இதை எதிர்பார்க்கவே இல்ல’!.. டாஸ் போட்ட பின் கோலி சொன்ன பதில்.. கொதித்த நெட்டிசன்கள்..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த செவ்வாய் கிழமை புனேவில் நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று (26.03.2021) அதே புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Why no Suryakumar Yadav in 2nd ODI? Netizens question Virat Kohli

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். அதில் ஷிகர் தவான் 4 ரன் எடுத்திருந்தபோது இங்கிலாந்து வீரர் ரீஸ் டோப்லியின் ஓவரில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து 25 ரன்களில் ரோஹித் ஷர்மாவும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

Why no Suryakumar Yadav in 2nd ODI? Netizens question Virat Kohli

இதனால் 37 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழி நடத்தி வருகிறார். அதேபோல் இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அதனால் 2-வது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் போட்டு முடித்ததும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் கோலி தெரிவித்தார்.

ஏற்கனவே விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் அணியில் உள்ள நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பை முதல்முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பிடித்துள்ள சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்திருக்கலாம் என கேப்டன் கோலியை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்