நட்டு பெயர் ‘மிஸ்ஸிங்’.. நடராஜனுக்கு பதிலா அவரை எடுக்க இதுதான் காரணமா..? ரசிகர்கள் கேட்கும் ‘ஒரே’ கேள்வி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் தொடரில் இருந்து விலகினார். அதனால் அவருக்கு பதிலாக தமிழக வீரரான நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவும், உமேஷ் யாதவுக்கு பதிலாக சைனியும் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் நடராஜன் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சைனி இடம்பெற்றது, ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாதாக நடந்த வலைப்பயிற்சியில் நடராஜன் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக ரஹானே, புஜாரா போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களை விட நடராஜன் வலைப்பயிற்சியில் நம்பிக்கை அளித்தார். ஆனால் வலைப்பயிற்சியில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை என்றாலும் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அதில், சைனிக்கு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக அனுபவம் இருக்கிறது. ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடி உள்ளார். மேலும் சைனிக்கு நீண்ட நேரம் களத்தில் இருந்த அனுபவம் இருப்பதால், நடராஜனுக்கு பதில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

நடராஜனின் நலம்விரும்பியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் இதுகுறித்து தனது கருத்தை முன்பு தெரிவித்திருந்தார். அதில், ‘ஒருநாள், டி20 போட்டி போல் டெஸ்ட் போட்டிகள் இருக்காது. தொடர்ந்து நிறைய பந்துகள் சரியான லென்த்-ல் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தடுத்த ஓவர்களில் பந்துவீச எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நடராஜனால் அப்படி வீச முடியுமா என்பது முழுமையாக எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நடராஜன் நன்றாக பந்து வீசுவார், சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்’ என வார்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11-ல் நடராஜன் இடம்பெறாதது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்