பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் மிஸ்ஸான ‘நட்டு’ பெயர்.. இந்த ‘ரூல்ஸ்’ தான் காரணமா..? வெளியான முக்கிய தகவல்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம், ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே 5, 3 மற்றும் 1 கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஏ+ கிரேடில் இடம்பிடிக்க வேண்டுமானால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்ற மூன்று வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து ஏ கிரேடில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகார் தவன், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பி கிரேடில் சாஹா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சர்துல் தாகூர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் சி கிரேடில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளர்.
ஆனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன் பெயர் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்த பட்டியலில் இடம்பெற வேண்டுமானால் பிசிசிஐ விதிகளின் படி, ஒரு வீரர் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் நடராஜன் ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதனால்தான் அவர் பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'போதும்... போதும்... மீம்ஸ் பெருசா போயிக்கிட்டிருக்கு'!.. மோரிஸ் அடித்த 'அந்த' மாஸ் ஷாட்!.. இணையத்தில் விருந்து வைக்கும் ரசிகர்கள்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு அப்போ புரியல... இப்ப புரியது'!.. டெல்லி அணியின் வெற்றியை... நூலிழையில் தட்டிப் பறித்த மோரிஸ்!.. திக் திக் சம்பவம்!!
- 'சார் கலக்கிட்டீங்க'!.. 'இல்ல என்ன மன்னிச்சிடுங்க... நான் பண்ணது பெரிய தப்பு'!.. 'அது இல்ல சார்'... 'அய்யோ ப்ளீஸ்'!.. விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்கிறாரு!.. என்னவா இருக்கும்?
- 'இந்திய' அணியில் இருந்து 'கழற்றி விடப்பட்டாரா 'நடராஜன்'??.. என்னாது, நல்லா ஆடியும் 'நட்டூ' பேரு மிஸ்ஸிங்கா??.." அதிர்ச்சியில் உறைந்த 'ரசிகர்கள்'!!
- 'ஜெயிக்குறமோ... தோக்குறமோ... மொதல்ல சண்டை செய்யணும்'!.. தனி ஆளாக களத்தில் இறங்கிய பண்ட்!.. கையில் எடுத்த புது வியூகம்!!
- ஏன் தோத்தீங்கனு இப்போ புரியுதா?... ஜெயிக்க வேண்டிய மேட்ச்யா!.. சன்ரைசர்ஸ் 'இத' பண்ணலனா ரொம்ப கஷ்டம்!.. உட்ராதீங்க யப்போவ்!!
- சென்னை பிட்ச்ச சென்னை வாசிகளவிட... கோலி நல்லா தெரிஞ்சுவச்சிருக்காரு!.. பிட்ச்சை வைத்து மேட்ச்சை மாற்றிய கோலியின் ராஜதந்திரம்!.. ஆர்சிபி ஜெயிச்சது 'இப்படி' தான்!
- மிடில் ஆர்டருல 'அவரு' இருந்துருந்தா 'மேட்ச்' வேற மாதிரி இருந்துருக்கும்...! இணையத்தில் கொந்தளித்த SRH ரசிகர்கள்...!
- 'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!.. மேக்ஸ்வெல் டா'!!.. 5 வருஷம் கழிச்சு... IPL-ல் பின்னியெடுத்துட்டாரு!.. எப்படி சாத்தியமானது?
- 'தாங்கவே முடியல... அவ்ளோ வேதனையா இருக்கு'!.. எல்லாத்துக்கும் காரணம் 'இது' தான்!.. மனமுடைந்த வார்னர்!.. ஜெயிக்க வேண்டிய மேட்ச் போச்சு!.. எப்படி நடந்தது?