முகத்தில் கருப்பு ஸ்டிக்கருடன் விளையாடிய செரீனா வில்லியம்ஸ்.. காரணம் இதுதானா?..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது முகத்தில் கருப்புநிற ஸ்டிக்கருடன் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்டது குறித்து உலகமே பரபரப்பாக பேசிவருகிறது.

Advertising
>
Advertising

Also Read | செவ்வாய் கிரகத்தில் உருவான வித்தியாசமான நில அமைப்பு.. ஏதும் சிக்னலா?.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய ஆச்சர்யமளிக்கும் உண்மை..!

அமெரிக்க சேர்ந்த செரினா வில்லியம்ஸ், உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1981 ஆம் ஆண்டு பிறந்த செரீனா இதுவரையில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் செரீனா, கடந்த ஒரு வருடங்களாக காயம் காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விம்பிள்டன் 2022-ல் ஒற்றையர் பிரிவில் துனிசியாவை சேர்ந்த ஹார்மனி டான் என்பவரை எதிர்த்து விளையாடினார் செரீனா வில்லியம்ஸ்.

கருப்பு ஸ்டிக்கர்

டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக கருதப்படும் செரீனா, தரவரிசையிலேயே இல்லாத வீராங்கனை ஹார்மனி டான் என்பவரிடம் 7-5, 1-6, 7-6 (10/7) என்ற செட் கணக்கில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார். இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியில் கன்னத்தில் கருப்பு நிற ஸ்டிக்கருடன் செரீனா விளையாடினார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எதற்காக இந்த ஸ்டிக்கரை அணிந்து செரீனா வில்லியம்ஸ் விளையாடுகிறார்? என அவரது ரசிகர்கள் இணைதளங்களில் கேள்வி எழுப்பிவந்த நிலையில், சைனஸ் பிரச்சனை காரணமாகவே அவர் இந்த ஸ்டிக்கருடன் விளையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செரீனா வில்லியம்ஸ் தனக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதாக ஏற்கனவே பலமுறை பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்.

சைனஸ் பிரச்சனை

இந்நிலையில், இந்த ஸ்டிக்கர் முகத்தில் ஒட்டப்படும்போது, மூக்கு பகுதியில் தசைகள் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராகும் எனவும் முகத்தில் உருவாகும் அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ்," எனக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது. உங்களுக்கு சைனஸ் இருக்கும்போது டென்னிஸ் விளையாடுவது அல்லது அன்றாட வேலைகளை செய்வது எளிதானது அல்ல" எனக் கூறியிருந்தார்.

செரீனா மட்டும் அல்லாது, பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, புகழ்பெற்ற  கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோரும் இந்த ஸ்டிக்கர்களை முன்னர் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "உங்க bag -அ செக் பண்ணனும்".. ஏர்போர்ட்ல சிக்குன 2 பெண்கள்.. உள்ள இருந்ததை உயிரினங்களை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்..!

SERENA WILLIAMS, FACE STICKERS, SERENA WILLIAMS WEARING FACE STICKERS, செரீனா வில்லியம்ஸ், கருப்பு ஸ்டிக்கர்

மற்ற செய்திகள்